திருமுறை 7 · 7.029 · 10

திருக்குருகாவூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
குருகாவூர் வெள்ளடை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்தவித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
இத்தனை ஆம்‌ ஆற்றை அறிந்திலேன்‌; எம்பெருமான்‌!“பித்தனே?” என்று உன்னைப் ‌ பேசுவார்‌, பிறர்‌ எல்லாம்‌;முத்தினை, மணிதன்னை, மாணிக்கம்‌, முளைத்து எழுந்தவித்தனே! குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
ஆவியைப்‌ போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்‌;வாவியில்‌ கயல்‌ பாய, குளத்து இடை மடைதோறும்‌காவியும்‌ குவளையும்‌ கமலம்‌ செங்கழுநீரும்மேவிய குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானேகாடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
பாடுவார்‌ பசி தீர்ப்பாய்‌; பரவுவார்‌ பிணி களைவாய்‌;ஒடு நன்‌ கலன்‌ ஆக உண்‌ பலிக்கு உழல்வானே!காடு நல்‌ இடம்‌ ஆகக் ‌ கடுஇருள்‌ நடம்‌ ஆடும்‌வேடனே! குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கைஅப்படி அழகாய அணிநடை மடவன்னம்மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
வெப்பொடு பிணி எல்லாம்‌ தவிர்த்து எனை ஆட்கொண்டாய்‌;ஒப்பு உடை ஒளி நீலம் ‌ ஓங்கிய மலர்ப் பொய்கை,அப்படி அழகுஆய அணி நடை மடஅன்னம்‌மெய்ப்படு குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானேஅரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
வரும்‌ பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்‌;சுரும்பு உடை மலர்க்கொன்றைச் ‌ சுண்ண வெண்‌ நீற்றானே !அரும்பு உடை மலர்ப்‌ பொய்கை அல்லியும்‌ மல்லிகையும்‌விரும்பிய குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமேவிண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
பண்‌ணிடைத்‌ தமிழ்‌ ஒப்பாய்‌! பழத்தினில்‌ சுவை ஒப்பாய்‌!கண்‌ணிடை மணி ஒப்பாய்‌! கடுஇருள்‌ சுடர்‌ ஒப்பாய்‌ !மண்‌ணிடை அடியார்கள் ‌ மனத்து இடர்‌ வாராமே,விண்‌ணிடைக்‌ குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னைநோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான்சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்டவேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
போந்தனை; தரியாமே நமன் தமர்‌ புகுந்து, என்னைநோந்தன செய்தாலும்‌, நுன்‌ அலது அறியேன்‌, நான்‌;சாம் தனை வருமேலும் ‌ தவிர்த்து எனை ஆட்கொண்டவேந்தனே! குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமேவிலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
மலக்கு இல்‌ நின்‌ அடியார்கள்‌ மனத்து இடை மால்‌ தீர்ப்பாய்‌;சலச்சலம்‌ மிடுக்கு உடைய தருமனார் தமர்‌ என்னைக்‌கலக்குவான்‌ வந்தாலும்‌, கடுந்‌ துயர்‌ வாராமே,விலக்குவாய்‌; குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமேதொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானேகெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கேவிடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
சொற்பிரிப்பு
படுவிப்பாய்‌ , உனக்கே ஆள் ‌ பலரையும்‌, பணியாமே;தொடுவிப்பாய்‌, துகிலொடு பொன்‌; தோல்‌ உடுத்து உழல்வானே!கெடுவிப்பாய்‌, அல்லாதார்‌; கேடு இலாப்‌ பொன்‌ அடிக்கேவிடுவிப்பாய்‌; குருகாவூர் ‌ வெள்ளடை நீ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாயவிளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானைஇளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன்உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே.
சொற்பிரிப்பு
வளம்‌ கனி பொழில்‌ மல்கு வயல்‌ அணிந்து அழகு ஆயவிளங்கு ஒளி குருகாவூர் ‌ வெள்ளடை உறைவானை,இளங்‌கிளை ஆரூரன்‌ வனப்பகை அவள்‌ அப்பன்‌உளம்‌ குளிர்‌ தமிழ்மாலை பத்தர்கட்கு உரை ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.