திருமுறை 7 · 7.028 · 10

திருக்கடவூர்வீரட்டம்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
கடவூர் வீரட்டம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்தவடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
பொடி ஆர்‌ மேனியனே! புரிநூல்‌ ஒருபால்‌ பொருந்த,வடி ஆர்‌ மூ இலை வேல்‌, வளர்‌ கங்கை இன் மங்கையொடும்‌,கடி ஆர்‌ கொன்றையனே! கடவூர் தனுள்‌ வீரட்டத்து எம்‌அடிகேள்‌! என்‌ அமுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள்மறையார் வானவனே மறையின்பொரு ளானவனேகறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
பிறை ஆரும்‌ சடையாய்‌! பிரமன் தலையில்‌ பலி கொள்‌மறை ஆர்‌ வானவனே! மறையின்‌ பொருள்‌ ஆனவனே !கறை ஆரும்‌ மிடற்றாய்‌! கடவூர் தனுள்‌ வீரட்டத்து எம்‌இறைவா! என்‌ அமுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்துகொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
அன்று ஆலின்‌ நிழல் கீழ் ‌ அறம்‌ நால்வர்க்கு அருள்புரிந்து,கொன்றாய்‌, காலன்‌; உயிர் ‌ கொடுத்தாய்‌, மறையோனுக்கு: மான்‌கன்று ஆரும்‌ கரவா! கடவூர்த்‌ திரு வீரட்டத்துள்‌என் தாதை! பெருமான்‌ ! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனேகாரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
போர்‌ ஆரும்‌ கரியின்‌ உரி போர்த்துப்‌ பொன் மேனியின் மேல்‌,வார்‌ ஆரும்‌ முலையாள்‌ ஒரு பாகம்‌ மகிழ்ந்தவனே!கார்‌ ஆரும்‌ மிடற்றாய்‌! கடவூர் தனுள்‌ வீரட்டானத்துஆரா என்‌ அமுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனேபொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய்கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
மை ஆர்‌ கண்டத்தினாய்‌! மத மா உரி போர்த்தவனே!பொய்யாது என்‌ உயிருள் ‌ புகுந்தாய்‌! இன்னம்‌ போந்து அறியாய்‌!கை ஆர்‌ ஆடு அரவா! கடவூர் தனுள்‌ வீரட்டத்து எம்‌ஐயா! என்‌ அழுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனேகண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
மண்‌, நீர்‌, தீ, வெளி, கால்‌, வரு பூதங்கள்‌ ஆகி, மற்றும்‌பெண்ணோடு ஆண்‌ அலியாய்‌, பிறவா உரு ஆனவனே!கண்‌ ஆரும்‌ மணியே! கடவூர் தனுள்‌ வீரட்டத்து எம்‌அண்ணா! என்‌ அமுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனேநரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனேகரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
எரி ஆர்‌ புன்சடை மேல்‌ இள நாகம்‌ அணிந்தவனே!நரி ஆரும்‌ சுடலைநகு வெண்தலை கொண்டவனே!கரி ஆர்‌ ஈர்‌ உரியாய்‌! கடவூர் தனுள்‌ வீரட்டத்து எம்‌அரியாய்‌! என்‌ அமுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரேகாறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
வேறா உன்‌ அடியேன்‌, விளங்கும்‌ குழைக்‌ காது உடையாய்‌!தேறேன்‌, உன்னை அல்லால்‌; சிவனே! என்‌ செழுஞ்சுடரே !காறு ஆர்‌ வெண்மருப்பா! கடவூர்த்‌ திரு வீரட்டத்துள்‌ஆறு ஆர்‌ செஞ்சடையாய்‌! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரியபயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரேகயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
சொற்பிரிப்பு
அயனோடு அன்று அரியும்‌ அடியும்‌ முடி காண்பு அரியபயனே! எம்‌ பரனே! பரம்‌ ஆய பரஞ்சுடரே!கயம்‌ ஆரும்‌ சடையாய்‌! கடவூர்த்‌ திரு வீரட்டத்துள்‌அயனே! என்‌ அமுதே! எனக்கு ஆர்‌ துணை, நீ அலதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள்ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
சொற்பிரிப்பு
கார்‌ ஆரும்‌ பொழில்‌ சூழ் ‌ கடவூர்த்‌ திரு வீரட்டத்துள்‌ஏர்‌ ஆரும்‌ இறையைத் ‌ துணையா எழில்‌ நாவலர் கோன்‌ஆரூரன்‌ அடியான்‌, அடித்தொண்டன்‌ உரைத்த தமிழ்‌பாரோர்‌ ஏத்தவல்லார் ‌ பரலோகத்து இருப்பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.