திருமுறை 7 · 7.027 · 10

திருக்கற்குடி

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
கற்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனேகடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஅடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
விடை ஆரும்‌ கொடியாய்‌! வெறி ஆர்‌ மலர்க் கொன்றையினாய்‌!படை ஆர்‌ வெண்மழுவா! பரம்‌ ஆய பரம்பரனே!கடி ஆர்‌ பூம்பொழில்‌ சூழ் ‌ திருக்‌ கற்குடி மன்னி நின்றஅடிகேள்‌! எம்பெருமான்‌! அடியேனையும்‌, “அஞ்சல்‌!" என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்றஇறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனேகறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஅறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
மறையோர்‌ வானவரும் ‌ தொழுது ஏத்தி வணங்க நின்றஇறைவா! எம்பெருமான்‌! எனக்கு இன்‌அமுது ஆயவனே!கறை ஆர்‌ சோலைகள்‌ சூழ் ‌ திருக்‌ கற்குடி மன்னி நின்றஅறவா! அங்கணனே! அடியேனையும்‌, “அஞ்சல்‌!” என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனேமலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனேகலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்றஅலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
சிலையால்‌ முப்புரங்கள் பொடி ஆகச்‌ சிதைத்தவனே!மலைமேல்‌ மா மருந்தே! மடமாது இடம்‌ கொண்டவனே!கலை சேர்‌ கையினனே! திருக்‌ கற்குடி மன்னி நின்றஅலை சேர்‌ செஞ்சடையாய்‌! அடியேனையும்‌, அஞ்சல்‌! என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனேமையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனேகையார் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னிநின்றஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
செய்யார்‌ மேனியனே! திரு நீல மிடற்றினனே!மைஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே!கை ஆர்‌ சூலத்தினாய்‌! திருக்‌ கற்குடி மன்னி நின்றஐயா! எம்பெருமான்‌ ! அடியேனையும்‌, அஞ்சல்‌! என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனேபந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனேகந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஎந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே.
சொற்பிரிப்பு
சந்து ஆர்‌ வெண்குழையாய்‌! சரி கோவண ஆடையனே!பந்து ஆரும்‌ விரலாள் ‌ ஒரு பாகம்‌ அமர்ந்தவனே!கந்து ஆர்‌ சோலைகள்‌ சூழ் ‌ திருக்‌ கற்குடி மன்னி நின்றஎந்தாய்‌! எம்பெருமான்‌! அடியேனையும்‌ ஏன்றுகொள்ளே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அரையார்* கீளொடுகோ வணமும் அரைக்கசைத்துவிரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஅரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.(*அரையார் கீளோடு கோவணமும் அரவும் அசைத்து என்றும் பாடம்.)
சொற்பிரிப்பு
அரை ஆர்‌ கீளொடு கோவணமும்‌ அரவும்‌ அசைத்துவிரை ஆர்‌ கொன்றை உடன்‌ விளங்கும்‌ பிறை மேல்‌ உடையாய்‌!கரை ஆரும்‌ வயல்‌ சூழ் ‌ திருக்‌ கற்குடி மன்னி நின்றஅரையா! எம்பெருமான்‌! அடியேனையும்‌, "அஞ்சல்‌!” என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்றசீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனேகாரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
பாரார்‌ விண்ணவரும் பரவிப்‌ பணிந்து ஏத்த நின்றசீர்‌ ஆர்‌ மேனியனே! திகழ்‌ நீல மிடற்றினனே!கார்‌ ஆர்‌ பூம்பொழில்‌ சூழ் ‌ திருக்‌ கற்குடி மன்னி நின்றஆரா இன்னமுதே! அடியேனையும்‌, அஞ்சல்‌! என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்றபுலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங்கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்றஅனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
நிலனே, நீர்‌, வளி, தீ, நெடுவானகம்‌, ஆகி நின்றபுலனே! புண்டரிகத்து அயன்‌, மாலவன்‌, போற்றி செய்யும்‌கனலே! கற்பகமே! திருக்‌ கற்குடி மன்னி நின்ற ‌அனல்‌ சேர்‌ கையினனே!- அடியேனையும்‌, அஞ்சல்‌! என்னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற்பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையேகரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றவிரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.
சொற்பிரிப்பு
வரும்‌ காலன்‌ உயிரை மடியத்‌ திரு மெல்விரலால்‌பெரும்‌ பாலன் தனக்காய்ப் ‌ பிரிவித்த பெருந்தகையே!கரும்பு ஆரும்‌ வயல்‌ சூழ்‌ திருக்‌ கற்குடி மன்னி நின்றவிரும்பா! எம்பெருமான்‌! அடியேனையும்‌ வேண்டுதியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங்கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரைவிலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.
சொற்பிரிப்பு
அலை ஆர்‌ தண்புனல்‌ சூழ்ந்து, அழகுஆகி, விழவு அமரும்‌கலை ஆர்‌ மா தவர்‌ சேர் ‌ திருக்‌ கற்குடிக்‌ கற்பகத்தைச்‌சிலை ஆர்‌ வாள் நுதலாள்‌ நல்ல சிங்கடி அப்பன்‌ உரைவிலை ஆர்‌ மாலை வல்லார் ‌ வியல் மூ உலகு ஆள்பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.