1
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பேஎன்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;முன் செய்த மூஎயிலும் எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;மின் செய்த நுண்இடையாள் பரவை இவள் தன் முகப்பே,என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.