திருமுறை 7 · 7.024 · 10

திருமழபாடி

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
மழபாடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமேஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
பொன்‌ ஆர்‌ மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,மின்‌ ஆர்‌ செஞ்சடை மேல் ‌ மிளிர்‌ கொன்றை அணிந்தவனே!மன்னே! மாமணியே! மழபாடியுள்‌ மாணிக்கமே!அன்னே! உன்னை அல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீவாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே*கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.(* ஆளாய் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
கீள்‌ ஆர்‌ கோவணமும்‌, திருநீறு மெய்‌ பூசி, உன் தன்‌தாளே வந்து அடைந்தேன்‌; தலைவா! எனை ஏன்றுகொள்‌, நீ!வாள்‌ ஆர்‌ கண்ணி பங்கா! மழபாடியுள்‌ மாணிக்கமே!கேளா! நின்னை அல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமேஅம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
எம்மான்‌, எம்‌ அ(ன்‌)னை, என் தனக்கு எள்‌-தனைச்‌ சார்வு ஆகார்‌;இம்‌ மாயப்‌ பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்‌;மைம்‌ மாம்‌ பூம்பொழில்‌ சூழ் ‌ மழபாடியுள்‌ மாணிக்கமே!அம்மான்‌! நின்னை அல்லால்‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமேஅண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
பண்டே நின்‌ அடியேன்‌; அடியார்‌ அடியார்கட்கு எல்லாம்தொண்டே பூண்டொழிந்தேன்‌; தொடராமைத்‌ துரிசு அறுத்தேன்‌;வண்டு ஆர்‌ பூம்பொழில்‌ சூழ் ‌ மழபாடியுள்‌ மாணிக்கமே!அண்டா! நின்னை அல்லால்‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரேமண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமேஅண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
கண்‌ஆய்‌, ஏழ்‌ உலகும்‌ கருத்து ஆயஅருத்தமுமாய்‌,பண்‌ ஆர்‌ இன் தமிழாய்‌, பரம்‌ ஆய பரஞ்சுடரே!மண்‌ ஆர்‌ பூம்பொழில்‌ சூழ் ‌ மழபாடியுள்‌ மாணிக்கமே!அண்ணா! நின்னை அல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கேஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீமாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமேஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
நாளார்‌ வந்து அணுகி நலியாமுனம்‌, நின் தனக்கேஆளா வந்து அடைந்தேன்‌; அடியேனையும்‌ ஏன்றுகொள்‌, நீ!மாளா நாள்‌ அருளும் ‌ மழபாடியுள்‌ மாணிக்கமே!ஆளா! நின்னை அல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்லவெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனேமைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமேஎந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
சந்து ஆரும்‌ குழையாய்‌! சடைமேல்‌ பிறைதாங்கி! நல்ல.வெந்தார்‌ வெண்பொடியாய்‌! விடை ஏறிய வித்தகனே!மைந்துஆர்‌ சோலைகள்‌ சூழ் ‌ மழபாடியுள்‌ மாணிக்கமே!எந்தாய்‌! நின்னைஅல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனேமையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமேஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
வெய்ய விரிசுடரோன் ‌ மிகு தேவர் கணங்கள்‌ எல்லாம்‌செய்ய மலர்கள்‌ இட, மிகு செம்மையுள்‌ நின்றவனே !மை ஆர்‌ பூம்பொழில்‌ சூழ் ‌ மழபாடியுள்‌ மாணிக்கமே!ஐயா! நின்னை அல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவாமறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமேஅறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
சொற்பிரிப்பு
நெறியே! நின்மலனே! நெடுமால் ‌ அயன்‌ போற்றி செய்யும்‌குறியே! நீர்மையனே! கொடி ஏர்‌ இடையாள்‌ தலைவா!மறி சேர்‌ அம்‌ கையனே! மழபாடியுள்‌ மாணிக்கமே!அறிவே! உன்னை அல்லால் ‌ இனி யாரை நினைக்கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனைவாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
சொற்பிரிப்பு
ஏர்‌ ஆர்‌ முப்புரமும் ‌ எரியச்‌ சிலை தொட்டவனை,வார்‌ ஆர் கொங்கை உடன் ‌ மழபாடியுள்‌ மேயவனை,சீர்‌ ஆர்‌ நாவலர் கோன்‌ ஆரூரன்‌ உரைத்த தமிழ்‌பாரோர்‌ ஏத்தவல்லார் ‌ பரலோகத்து இருப்பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.