திருமுறை 7 · 7.023 · 10

திருக்கழிப்பாலை

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமேமுடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.
சொற்பிரிப்பு
செடியேன்‌ தீவினையில்‌ தடுமாறக்‌ கண்டாலும்‌,அடியான்‌; ஆ அ! எனாது ஒழிதல்‌ தகவு ஆமே?முடிமேல்‌ மா மதியும் ‌ அரவும்‌ உடன் துயிலும்‌வடிவே தாம்‌ உடையார் ‌ மகிழும்‌ கழிப்பாலை அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால்அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளிஇங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும்கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
சொற்பிரிப்பு
எங்கேனும்‌ இருந்து உன் ‌ அடியேன்‌ உனை நினைந்தால்‌,அங்கே வந்து என்னொடும் ‌ உடன்‌ஆகி நின்று அருளி,இங்கே என்‌ வினையை அறுத்திட்டு, எனை ஆளும்கங்கா நாயகனே ! கழிப்பாலை மேயானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங்கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
சொற்பிரிப்பு
ஒறுத்தாய்‌, நின்‌ அருளில்‌; அடியேன்‌ பிழைத்தனகள்‌பொறுத்தாய்‌, எத்தனையும் ‌ நாயேனைப்‌ பொருள்படுத்துச்‌செறுத்தாய்‌; வேலைவிடம் ‌ மறியாமல்‌ உண்டு கண்டம்‌கறுத்தாய்‌ தண் கழனிக்‌ கழிப்பாலை மேயானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன்விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற்கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
சொற்பிரிப்பு
சுரும்பு ஆர்‌ விண்டமலர் ‌ அவை தூவி, தூங்கு கண்ணீர்‌அரும்பாநிற்கும்‌ மனத்து அடியாரொடும்‌ அன்பு செய்வன்‌;விரும்பேன்‌, உன்னை அல்லால்‌, ஒரு தெய்வம்‌ என்‌ மனத்தால்‌;கரும்பு ஆரும்‌ கழனிக் ‌ கழிப்பாலை மேயானே !
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித்தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய்கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற்கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.
சொற்பிரிப்பு
ஒழிப்பாய்‌, என்‌ வினையை; உகப்பாய்‌; முனிந்து அருளித்‌தெழிப்பாய்‌; மோதுவிப்பாய்‌; விலை ஆவணம்‌ உடையாய்‌கழிப்பால்‌ கண்டல்‌ தங்கச் ‌ சுழி ஏந்து மா மறுகின்‌கழிப்பாலை மருவும்‌ கனல்‌ ஏந்து கையானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற்போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக்காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.
சொற்பிரிப்பு
ஆர்த்தாய்‌, ஆடு அரவை அரை ஆர்‌ புலி அதள் மேல்‌;போர்த்தாய்‌, ஆனையின் தோல் ‌உரிவை புலால்‌ நாற;காத்தாய்‌, தொண்டு செய்வார் ‌ வினைகள்‌ அவை போக,பார்த்தானுக்கு இடம்‌ ஆம்‌ பழி இல்‌ கழிப்பாலை அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள்உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனேஎரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங்கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
சொற்பிரிப்பு
பருத்‌தாள்‌ வன்‌ பகட்டைப்‌ படம்‌ ஆக முன்‌ பற்றி, அதள்‌உரித்தாய்‌, ஆனையின் தோல்‌; உலகம்‌ தொழும்‌ உத்தமனே!எரித்தாய்‌, முப்புரமும்‌; இமையோர்கள்‌ இடர்‌ கடியும்‌கருத்தா! தண் கழனிக்‌ கழிப்பாலை மேயானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமாஉடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக்கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
சொற்பிரிப்பு
படைத்தாய்‌, ஞாலம்‌ எலாம்‌: படர் புன்சடை எம்‌ பரமா!உடைத்தாய்‌, வேள்வி தனை; உமையாளை ஓர் கூறு உடையாய்‌;அடர்த்தாய்‌ , வல்‌அரக்கன் ‌ தலை பத்தொடு தோள்‌ நெரிய;கடல்‌ சாரும்‌ கழனிக் ‌ கழிப்பாலை மேயானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளேமெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.
சொற்பிரிப்பு
பொய்யா நாஅதனால்‌ புகழ்வார்கள்‌ மனத்தினுள்ளேமெய்யே நின்று எரியும் ‌ விளக்கே ஒத்த தேவர்பிரான்‌,செய்யானும்‌ கரிய நிறத்தானும்‌ தெரிவு அரியான்‌,மை ஆர்‌ கண்ணியொடு மகிழ்வான்‌, கழிப்பாலை அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டிகழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.
சொற்பிரிப்பு
பழி சேர்‌ இல்‌ புகழான்‌, பரமன்‌, பரமேட்டி,கழி ஆர்‌ செல்வம்‌ மல்கும் ‌ கழிப்பாலை மேயானை,தொழுவான்‌ நாவலர் கோன்‌ ஆரூரன்‌ உரைத்த தமிழ்‌வழுவா மாலை வல்லார் ‌ வானோர்‌ உலகு ஆள்பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.