1
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.
சொற்பிரிப்பு
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,சென்னியில் எங்கள் பிரான், திரு நீலமிடற்று எம்பிரான்,மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப்பன்னிய எங்கள் பிரான் பழ மண்ணிப் படிக்கரையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.