1
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்றசிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
சொற்பிரிப்பு
நொந்தா ஒண் சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்றசிந்தாய்! எந்தை பிரான்! திரு மேற்றளி உறையும்எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.