திருமுறை 7 · 7.020 · 10

திருக்கோளிலி

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
கோளிலி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமேகோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
நீள நினைந்து அடியேன்‌ உமை நித்தலும்‌ கைதொழுவேன்‌;வாள்‌ அன கண்‌ மடவாள்‌ அவள் ‌ வாடி வருந்தாமே,கோளிலி எம்பெருமான்‌! குண்டையூர்ச்‌ சில நெல்லுப்‌ பெற்றேன்‌ஆள்‌ இலை; எம்பெருமான்‌, அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனேதெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
வண்டு அமரும் குழலாள்‌ உமை நங்கை ஓர் பங்கு உடையாய்‌!விண்டவர் தம்‌ புரம் மூன்று எரி செய்த எம்‌ வேதியனே!தெண்திரை நீர்‌ வயல்‌ சூழ்‌ திருக்‌கோளிலி எம்பெருமான்‌ !அண்டம்‌ அது ஆயவனே, அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய்மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றேகோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
பாதி ஓர்‌ பெண்ணை வைத்தாய்‌; படரும் ‌ சடைக்‌ கங்கை வைத்தாய்‌;மாதர்‌ நல்லார்‌ வருத்தம்‌ அது நீயும்‌ அறிதி அன்றே!கோது இல்‌ பொழில்‌ புடை சூழ்‌ குண்டையூர்ச்‌ சில நெல்லுப்‌ பெற்றேன்‌;ஆதியே, அற்புதனே, அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீபுல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோகொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
சொல்லுவது என்‌, உனை நான்‌? தொண்டை வாய்‌ உமை நங்கையை நீபுல்கி இடத்தில்‌ வைத்தாய்க்கு ஒரு பூசல்‌ செய்தார்‌ உளரோ?கொல்லை வளம்‌ புறவில்‌ குண்டையூர்ச்‌ சில நெல்லுப்‌ பெற்றேன்‌;அல்லல்‌ களைந்து அடியேற்கு அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனேபல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதாகொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான்அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
முல்லை முறுவல்‌ உமை ஒரு பங்கு உடை முக்கணனே!பல்‌ அயர்‌ வெண்தலையில்‌ பலி கொண்டு உழல்‌ பாசுபதா!கொல்லை வளம்‌ புறவில்‌- திருக்‌ கோளிலி எம்பெருமான்‌!அல்லல்‌ களைந்து, அடியேற்கு அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றேகுரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
குரவு அமரும்‌ குழலாள்‌ உமை நங்கை ஒர் பங்கு உடையாய்‌!பரவை பசி வருத்தம்‌ அது நீயும்‌ அறிதி அன்றே!குரவு அமரும்‌ பொழில்‌ சூழ்‌ குண்டையூர்ச்‌ சில நெல்லுப்‌ பெற்றேன்‌;அரவம்‌ அசைத்தவனே, அவைஅட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும்வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனேசெம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான்அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
எம்பெருமான்‌! நுனையே நினைந்து ஏத்துவன்‌, எப்பொழுதும்‌;வம்பு அமரும்‌ குழலாள்‌ ஒரு பாகம்‌ அமர்ந்தவனே!செம்பொனின்‌ மாளிகை சூழ்‌ திருக் ‌ கோளிலி எம்பெருமான்‌!அன்பு அது ஆய்‌ அடியேற்கு அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
அரக்கன்‌ முடிகரங்கள்‌ அடர்த்திட்ட எம்‌ ஆதிப்பிரான்‌!பரக்கும்‌ அரவு அல்குலாள் பரவை அவள்‌ வாடுகின்றாள்‌;குரக்கு இனங்கள்‌ குதிகொள்‌ குண்டையூர்ச்‌ சில நெல்லுப்‌ பெற்றேன்‌;இரக்கம்‌ அது ஆய்‌ அடியேற்கு அவைஅட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங்கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான்தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.
சொற்பிரிப்பு
பண்டைய மால்‌, பிரமன்‌, பறந்தும்‌ இடந்தும்‌ அயர்ந்தும்‌கண்டிலராய்‌, அவர்கள்‌ கழல் ‌ காண்பு அரிது ஆய பிரான்‌!தெண்திரை நீர்‌ வயல்‌ சூழ்‌ திருக் ‌ கோளிலி எம்பெருமான்‌!அண்டம்‌ அதுஆயவனே, அவை அட்டித் தரப்‌ பணியே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனைநல்லவர் தாம்பர வுந்திரு நாவல வூரனவன்நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந் தேத்திய பத்தும்வல்லார்அல்லல் களைந்துல கின்அண்டர் வானுல காள்பவரே.
சொற்பிரிப்பு
கொல்லை வளம்‌ புறவில்‌- திருக்‌ கோளிலி மேயவனைநல்லவர் தாம்‌ பரவும்‌ திரு நாவல ஊரன்‌ அவன்‌நெல்‌ இட ஆட்கள்‌ வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்‌ வல்லார்‌,அல்லல்‌ களைந்து உலகின்‌, அண்டர்‌ வான்‌ உலகு ஆள்‌பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.