திருமுறை 7 · 7.019 · 11

திருநின்றியூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
நின்றியூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அற்றவ னாரடி யார்தமக் காயிழை பங்கினராம்பற்றவ னாரெம் பராபர ரென்று பலர்விரும்பும்கொற்றவ னார்குறு காதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால்செற்றவ னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
அற்றவனார்‌, அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர்‌ ஆம்‌;பற்றவனார்‌; “*எம்‌ பராபரர்‌”” என்று பலர்‌ விரும்பும்‌கொற்றவனார்‌; குறுகாதவர்‌ ஊர்‌ நெடு வெஞ்சரத்தால்‌செற்றவனார்க்கு இடம்‌ ஆவது- நம்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்தநீறுபூசத்தி னார்புக லிந்நகர் போற்றுமெம் புண்ணியத்தார்நேசத்தி னாலென்னை யாளுங்கொண் டார்நெடு மாகடல்சூழ்தேசத்தி னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
வாசத்தின்‌ ஆர்‌ மலர்க் கொன்றை உள்ளார்‌; வடிவு ஆர்ந்த நீறுபூசத்தினார்‌; புகலிந்‌ நகர்‌ போற்றும்‌ எம்‌ புண்ணியத்தார்‌;நேசத்தினால்‌ என்னை ஆளும் கொண்டார்‌; நெடுமால் கடல்‌ சூழ்‌தேசத்தினார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச்சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார்மங்கையோர் பாகர் மகிழ்ந்த இடம்வள மல்குபுனற்செங்கயல் பாயும் வயல்பொலி யுந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
அம்‌ கையில்‌ மூஇலை வேலர்‌; அமரர்‌ அடி பரவ,சங்கையை நீங்க, அருளித்‌ தடங்கடல் நஞ்சம்‌ உண்டார்‌;மங்கை ஒர்பாகர்‌; மகிழ்ந்த இடம்‌ வளம்‌ மல்கு புனல்‌செங்கயல்‌ பாயும்‌ வயல்‌ பொலியும்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆறுகந் தாரங்கம் நான்மறை யாரெங்கு மாகியடல்ஏறுகந் தாரிசை ஏழுகந் தார்முடிக் கங்கைதன்னைவேறுகந் தார்விரி நூலுகந் தார்பரி சாந்தமதாநீறுகந் தாருறை யும்மிட மாந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
ஆறு உகந்தார்‌, அங்கம்‌; நால் மறையார்‌; எங்கும்‌ ஆகி அடல்‌ஏறு உகந்தார்‌, இசை ஏழ்‌ உகந்தார்‌; முடிக்‌ கங்கை தன்னைவேறு உகந்தார்‌; விரிநூல்‌ உகந்தார்‌; பரி சாந்தம்‌ அதாநீறு உகந்தார்‌; உறையும்‌ இடம் ‌ஆம்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் லார்நறு நெய்தயிர்பால்அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி னாரதி கைப்பதியேதஞ்சங்கொண் டார்தமக் கென்றும் இருக்கை சரணடைந்தார்நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
வஞ்சம்கொண்டார்‌ மனம்‌ சேரகில்லார்‌; நறுநெய்‌ தயிர்‌ பால்‌அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்‌; அதிகைப் பதியேதஞ்சம்‌ கொண்டார்‌; தமக்கு என்றும் ‌ இருக்கை, சரண்‌ அடைந்தார்‌நெஞ்சம்‌, கொண்டார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆர்த்தவர் ஆடர வம்மரை மேற்புலி ஈருரிவைபோர்த்தவர் ஆனையின் தோலுடல் வெம்புலால் கையகலப்பார்த்தவ ரின்னுயிர் பார்படைத் தான்சிர மஞ்சிலொன்றைச்சேர்த்தவ ருக்குறை யும்மிட மாந்திரு நின்றியூரே
சொற்பிரிப்பு
ஆர்த்தவர்‌, ஆடு அரவம்‌ அரை மேல்‌; புலி ஈர் உரிவைபோர்த்தவர்‌; ஆனையின் தோல்‌ உடல் ‌ வெம்‌ புலால்‌ கை அகலப்‌பார்த்தவர்‌; இன்‌உயிர்‌, பார்‌, படைத்தான்‌ சிரம்‌ அஞ்சில்‌ ஒன்றைச்‌சேர்த்தவருக்கு உறையும்‌ இடம் ‌ஆம்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

தலையிடை யார்பலி சென்றகந் தோறுந் திரிந்தசெல்வர்மலையுடை யாளொரு பாகம்வைத் தார்கல் துதைந்தநன்னீர்அலையுடை யார்சடை எட்டுஞ் சுழல அருநடஞ்செய்நிலையுடை யாருறை யும்மிட மாந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
தலை இடை ஆர்‌ பலி சென்று அகம் தோறும்‌ திரிந்த செல்வர்‌;மலை உடையாள்‌ ஒரு பாகம்‌ வைத்தார்‌; கல்‌ துதைந்த நன்நீர்‌அலை உடையார்‌; சடை எட்டும் ‌ சுழல, அருநடம் செய்‌நிலை உடையார்‌; உறையும்‌ இடம் ‌ஆம்‌ திரு நின்றியூரே,

8

எட்டுகந் தார்திசை ஏழுகந் தார்எழுத் தாறுமன்பர்இட்டுகந் தார்மலர்ப் பூசையிச் சிக்கும் இறைவர்முன்னாள்பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலியிரந்தூண்சிட்டுகந் தார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
எட்டு உகந்தார்‌, திசை; ஏழ்‌ உகந்தார்‌, எழுத்து; ஆறும்‌ அன்பர்‌இட்டு உகந்து ஆர்‌ மலர்ப்‌ பூசை இச்சிக்கும்‌ இறைவர்‌; முன்நாள்‌பட்டு உகும்‌ பார்‌இடைக்‌ காலனைக்‌ காய்ந்து, பலி இரந்து ஊண்‌சிட்டு உகந்தார்க்கு இடம்‌ ஆவது- நம்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காலமும் ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் பாரடி போற்றிசைப்பமாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத் தால்வணங்கநீலநஞ் சுண்டவ ருக்கிட மாந்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
காலமும்‌ ஞாயிறும்‌ ஆகி நின்றார்‌; கழல்‌ பேண வல்லார்‌சீலமும்‌ செய்கையும்‌ கண்டு உகப்பார்‌; அடி போற்று இசைப்ப,மாலொடு நான்முகன்‌ இந்திரன்‌ மந்திரத்தால்‌ வணங்க,நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ‌ஆம்‌ திரு நின்‌றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வாயார் மனத்தால் நினைக்கு மவருக் கருந்தவத்தில்தூயார் சுடுபொடி யாடிய மேனியர் வானிலென்றும்மேயார் விடையுகந் தேறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச்சேயார் அடியார்க் கணியவர் ஊர்திரு நின்றியூரே.
சொற்பிரிப்பு
வாயார்‌, மனத்தால்‌ நினைக்கும் அவருக்கு; அருந்தவத்தில்‌தூயார்‌ ; சுடுபொடி ஆடிய மேனியர்‌; வானில்‌ என்றும்‌மேயார்‌; விடை உகந்து ஏறிய வித்தகர்‌; பேர்ந்தவர்க்குச்‌சேயார்‌; அடியார்க்கு அணியவர்‌; ஊர்‌ திரு நின்றியூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை அறாத்திரு நின்றியூரிற்சீருஞ் சிவகதி யாயிருந் தானைத் திருநாவலாரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல் லார்வினைபோய்ப்பாரும் விசும்புந் தொழப்பர மன்னடி கூடுவரே.
சொற்பிரிப்பு
சேரும்‌ புகழ்த்‌ தொண்டர்‌ செய்கை அறாத்‌ திரு நின்றியூரில்‌சீரும்‌ சிவகதியாய்‌ இருந்தானைத்‌ திரு நாவல்‌ ஆ-ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்‌ வல்லார்‌ வினை போய்‌,பாரும்‌ விசும்பும்‌ தொழ, பரமன்‌ அடி கூடுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.