திருமுறை 7 · 7.018 · 10

திருவேள்விக்குடியும்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
துருத்தி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லைசேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற்காப்பது வேள்விக் குடிதண் துருத்தியெங் கோன்அரைமேல்ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
மூப்பதும்‌ இல்லை; பிறப்பதும் ‌ இல்லை; இறப்பது இல்லை;சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும்‌ ஆக; சிந்திக்கின்‌ அல்லால்‌,காப்பது வேள்விக்குடி, தண் துருத்தி; எம்‌ கோன்‌ அரைமேல்‌ஆர்ப்பது நாகம்‌; அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கட்டக்காட் டில்நட மாடுவர் யாவர்க்குங் காட்சியொண்ணார்சுட்டவெண் ணீறணிந் தாடுவர் பாடுவர் தூயநெய்யால்வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார்அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
கட்டக்‌ காட்டின்‌ நடம்‌ஆடுவர்‌; யாவர்க்கும்‌ காட்சி ஒண்ணார்‌;சுட்ட வெண்நீறு அணிந்து ஆடுவர்‌; பாடுவர்‌; தூய நெய்யால்‌வட்டக் குண்டத்தில்‌ எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்‌அட்டக்‌ கொண்டு, உண்பது; அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பேருமோர் ஆயிரம் பேருடை யார்பெண்ணோ டாணுமல்லர்ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம்காருங் கருங்கடல் நஞ்சமு துண்டுகண் டங்கறுத்தார்க்காரம்பாம் பாவ தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
பேரும்‌ ஓர்‌ ஆயிரம் பேர்‌ உடையார்‌; பெண்ணோடு ஆணும்‌ அல்லர்‌;ஊரும்‌ அது ஒற்றியூர்‌; மற்றை ஊர்‌ பெற்றவா நாம்‌ அறியோம்‌;காரும்‌ கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்‌ கறுத்தார்க்குஆரம்‌ பாம்பு ஆவது; அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஏனக்கொம் பும்மிள ஆமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக்கானக்காட் டிற்றொண்டர் கண்டன சொல்லியுங் காமுறவேமானைத்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டுயானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
ஏனக்கொம்பும்‌ இள ஆமையும்‌ பூண்டு, அங்கு ஓர்‌ ஏறும்‌ ஏறி,கானக்‌-காட்டில்‌ தொண்டர்‌ கண்டன சொல்லியும்‌, காமுறவே,மானைத்தோல்‌ ஒன்றை உடுத்து, புலித்தோல்‌ பியற்கும்‌ இட்டு,யானைத்தோல்‌ போர்ப்பது; அறிந்தோமேல் ‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லாற்பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் ஏறியோர் பூதந்தம்பாற்பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ றும்பல பாம்புபற்றிஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர்‌ ஊண்‌ இலர்‌, ஊர்‌ இடு பிச்சை அல்லால்‌; .பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர்‌; ஏறி ஓர்‌ பூதம்‌ தம்பால்‌பாட்‌டிக்கொண்டு உண்பவர்‌; பாழிதொறும்‌ பல பாம்பு பற்றிஆட்டிக்கொண்டு, உண்பது; அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குறவனார் தம்மகள் தம்மக னார்மண வாட்டிகொல்லைமறவனா ராயங்கோர் பன்றிப்பின் போவது மாயங்கண்டீர்இறைவனார் ஆதியார் சோதிய ராயங்கோர் சோர்வுபடாஅறவனார் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
குறவனார் தம்மகள்‌ , தம்‌ மகனார் மணவாட்டி; கொல்லைமறவனாராய்‌, அங்கு ஓர்‌ பன்றிப்‌ பின்‌ போவது மாயம் கண்டீர்‌;இறைவனார்‌, ஆதியார்‌, சோதியராய்‌, அங்கு ஓர்‌ சோர்வு படாஅறவனார்‌ ஆவது அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பித்தரை ஒத்தொரு பெற்றியர் நற்றவை என்னைப்பெற்றமுற்றவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார்செத்தவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகில்அத்தவம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்‌; நற்றவை, என்னைப்‌ பெற்ற;முற்றவை, தம்‌ அ(ன்‌)னை, தந்தைக்கும் ‌ தவ்வைக்கும்‌ தம்பிரானார்‌;செத்தவர் தம்‌ தலையில்‌ பலி கொள்வதே செல்வம்‌ ஆகில்‌,அத்‌ தவம்‌ ஆவது அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலருறைவான்தம்பரம் அல்லவர் சிந்திப்ப வர்தடு மாற்றறுப்பார்எம்பரம் அல்லவர் என்னெஞ்சத் துள்ளும் இருப்பதாகில்அம்பரம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
உம்பரான்‌, ஊழியான்‌ , ஆழியான்‌, ஓங்கி மலர்‌ உறைவான்‌,தம்‌ பரம்‌ அல்லவர்‌; சிந்திப்பவர்‌ தடுமாற்று அறுப்பார்‌;எம்‌ பரம்‌ அல்லவர்‌; என்‌ நெஞ்சத்து உள்ளும்‌ இருப்பது ஆகில்‌அம்பரம்‌ ஆவது அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இந்திர னுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார்மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர்சிந்துரக் கண்ணனும் நான்முக னும்முட னாய்த்தனியேஅந்தரஞ் செல்வத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே.
சொற்பிரிப்பு
இந்திரனுக்கும்‌ இராவணனுக்கும்‌ அருள்புரிந்தார்‌;மந்திரம்‌ ஓதுவர்‌; மாமறை பாடுவர்‌; மான்மறியர்‌;சிந்துரக் கண்ணனும்‌, நான்முகனும்‌, உடன்‌ஆய்த்‌ தனியேஅந்தரம்‌ செல்வது அறிந்தோமேல்‌ நாம்‌ இவர்க்கு ஆட்படோமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோன் நலத்தமிழைப்பாடவல் லபர மன்னடி யார்க்கடி மைவழுவாநாடவல் லதொண்டன் ஆரூரன் ஆட்படு மாறுசொல்லிப்பாடவல் லார்பர லோகத் திருப்பது பண்டமன்றே.
சொற்பிரிப்பு
கூடலர் மன்னன்‌, குல நாவலூர்க் கோன்‌, நலத்‌ தமிழைப்‌பாட வல்ல பரமன்‌ அடியார்க்கு அடிமை வழுவாநாட வல்ல தொண்டன்‌, ஆரூரன்‌, ஆட்படும்‌ ஆறு சொல்லிப்‌பாட வல்லார்‌ பரலோகத்து இருப்பது பண்டம்‌ அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.