திருமுறை 7 · 7.017 · 11

திருநாவலூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
நாவலூர்
நாடு
நடுநாடு

1

கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்யமேவலர் முப்புரந் தீயெழு வித்தவன் ஓரம்பினால்ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை யாளுங்கொண்டநாவல னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
கோவலன்‌ நான்முகன்‌ வானவர் கோனும்‌ குற்றேவல்‌ செய்ய,மேவலர்‌ முப்புரம்‌ தீ எழு வித்தவர்‌, ஓர்‌ அம்பினால்‌;ஏவலனார்‌; வெண்ணெய்‌ நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டநாவலனார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ கம்புணர்த்தநன்மையி னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
தன்மையினால்‌ அடியேனைத்‌ தாம் ‌ ஆட்கொண்ட நாள்‌, சபைமுன்‌வன்மைகள்‌ பேசிட, வன்தொண்டன்‌ என்பது ஓர்‌ வாழ்வு தந்தார்‌;புன்மைகள்‌ பேசவும்‌, பொன்னைத்‌ தந்து என்னைப்‌ போகம்‌ புணர்த்தநன்மையினார்க்கு இடம்‌ ஆவது- நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வேகங்கொண் டோ டிய வெள்விடை ஏறியோர் மெல்லியலைஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்போகங்கொண் டார்கடற் கோடியின் மோடியைப் பூண்பதாகநாகங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
வேகம் கொண்டு ஓடிய வெள்விடை ஏறி ஓர்‌ மெல்லியலைஆகம்‌ கொண்டார்‌; வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்‌;போகம்‌ கொண்டார்‌, கடல்கோடியில் ‌ மோடியை; பூண்பது ஆகநாகம்‌ கொண்டார்க்கு இடம்‌ ஆவது- நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார்தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார்நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டுநஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
அஞ்சும்‌ கொண்டு ஆடுவர்‌, ஆவினில்‌; சேவினை ஆட்சி கொண்டார்‌;தஞ்சம்‌ கொண்டார்‌, அடிச் சண்டியை, தாம்‌ என வைத்து உகந்தார்‌;நெஞ்சம்‌ கொண்டார்‌; வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டுநஞ்சம்‌ கொண்டார்க்கு இடம்‌ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உம்பரார் கோனைத்திண் டோள்முரித் தாருரித் தார்களிற்றைச்செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றரோர் ஆவணத்தால்எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டநம்பிரா னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
உம்பரார் கோனைத்‌ திண்தோள்‌ முரித்தார்‌; உரித்தார்‌, களிற்றை;செம்பொன்‌ ஆர்‌ தீவண்ணர்‌; தூ வண்ண நீற்றர்‌; ஓர்‌ ஆவணத்தால்‌,எம்பிரானார்‌, வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டநம்பிரானார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும்வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன்நாட்டங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
கோட்டம் கொண்டார்‌, குடமூக்கிலும் ‌ கோவலும்‌ கோத்திட்டையும்‌;வேட்டம்‌ கொண்டார்‌; வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்‌;ஆட்டம்‌ கொண்டார்‌, தில்லைச்‌ சிற்றம் பலத்தே; அருக்கனை முன்‌நாட்டம்‌ கொண்டார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தாயவ ளாய்த்தந்தை யாகிச் சாதல் பிறத்தலின்றிப்போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்தவைத்தவேயவ னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டநாயக னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
தாய்‌ அவளாய்‌, தந்‌தை ஆகி, சாதல்‌ பிறத்தல்‌ இன்றி,போய்‌ அகலாமைத்‌ தன்‌ பொன்‌அடிக்கு என்னைப்‌ பொருந்த வைத்தவேயவனார்‌; வெண்ணெய்‌ நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டநாயகனார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வாயாடி மாமறை ஓதியோர் வேதிய னாகிவந்துதீயாடி யார்சினக் கேழலின் பின்சென்றோர் வேடுவனாய்வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டநாயாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
வாயாடி, மாமறை ஓதி ஓர் ‌ வேதியன்‌ ஆகி வந்து;தீ ஆடியார்‌; சினக்‌ கேழலின்‌ பின்‌ சென்று ஓர்‌ வேடுவனாய்‌,வேய்‌ ஆடியார்‌; வெண்ணெய்‌ நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டநாயாடியார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும்வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள்இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டநடமாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
படம்‌ ஆடு பாம்பு அணையானுக்கும்‌, பாவைநல்லாள் தனக்கும்‌,வடம்‌ ஆடு மால்விடை ஏற்றுக்கும்‌, பாகனாய்‌ வந்து ஒரு நாள்‌இடம்‌ ஆடியார்‌; வெண்ணெய்‌நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டநடம்‌ ஆடியார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார்அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்தடுக்கவொண் ணாததோர் வேழத்தி னையுரித் திட்டுமையைநடுக்கங்கண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
சொற்பிரிப்பு
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர்‌ வெற்பு எடுத் தான்‌ வலியை நெரித்தார்‌;அடக்கம்‌ கொண்டு ஆவணம்‌ காட்டி நல் ‌ வெண்ணெயூர்‌ ஆளும்கொண்டார்‌;தடுக்க ஒண்ணாதது ஓர்‌ வேழத்தினை உரித்திட்டு உமையைநடுக்கம்‌ கண்டார்க்கு இடம்‌ ஆவது நம்‌ திரு நாவலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன்ஆதரித் தீசனுக் காட்செயும் ஊரணி நாவலூரென்றோதநற் றக்கவன் றொண்டனா ரூரன் உரைத்ததமிழ்காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே.
சொற்பிரிப்பு
நாதனுக்கு ஊர்‌, நமக்கு ஊர்‌, நரசிங்க முனை அரையன்‌ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ‌ ஊர்‌, அணி நாவலூர்‌ என்றுஓத நல்‌ தக்க வன்தொண்டன்‌ ஆரூரன்‌ உரைத்த தமிழ்‌காதலித்தும்‌ கற்றும்‌ கேட்பவர் தம்‌ வினைக் கட்டு அறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.