1
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன்பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன் பிறவே னாகிலும் மறவேன்காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால் கருதீ ராகிலுங் கருதிநானே லும்மடி பாடுதல் ஒழியேன் நாட்டியத் தான்குடி நம்பீ.
சொற்பிரிப்பு
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் ; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் ;பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்;காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி,நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.