திருமுறை 7 · 7.014 · 12

திருப்பாச்சிலாச்சிராமம்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கராகம்
தலம்
பாச்சிலாச்சிராமம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றிஉய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்பித்தரே யொத்தோர் நச்சில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
வைத்தனன்‌ தனக்கே, தலையும்‌ என்‌ நாவும்‌ நெஞ்சமும்‌; வஞ்சம் ஒன்று இன்றிஉய்த்தனன்‌ தனக்கே, திருவடிக்கு அடிமை; உரைத்தக்கால்‌, உவமனே ஒக்கும்‌;பைத்த பாம்பு ஆர்த்து ஓர்‌ கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்‌பித்தரே ஒத்து ஓர் நச்சிலர்‌ ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையுமென் றிருந்தேன்என்னையும் ஒருவன் உளனென்று கருதி இறையிறை திருவருள் காட்டார்அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை அடிகள்பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
”அன்னையே!” என்னேன்‌; “அத்தனே!” என்னேன்‌; “அடிகளே அமையும்‌” என்று இருந்தேன்‌;என்னையும்‌, “ஒருவன்‌ உளன்‌” என்று கருதி, இறை இறை திருஅருள்‌ காட்டார்‌;அன்னம்‌ ஆம்‌ பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள்‌பின்னையே அடியார்க்கு அருள் செய்வது ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன்செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர்அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாதுசொன் னாலும்பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
உற்றபோது அல்லால்‌ உறுதியை உணரேன்‌; “உள்ளமே அமையும்‌” என்று இருந்தேன்‌;செற்றவர்‌ புரம் மூன்று எரி எழச்‌ செற்ற, செஞ்சடை, நஞ்சு அடை கண்டர்‌,அற்றவர்க்கு அருள் செய்‌ பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம்‌, யாது சொன்னாலும்‌,பெற்றபோது உகந்து, பெறாவிடில்‌ இகழில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நாச்சில பேசி நமர்பிறர் என்று நன்றுதீ தென்கிலர் மற்றோர்பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
நாச்‌ சில பேசி, "நமர்‌ பிறர்‌” என்று, "நன்று தீது” என்கிலர்‌; மற்று ஓர்‌பூச்சு இலை; நெஞ்சே! பொன்‌ விளை கழனிப்‌ புள்‌ இனம்‌ சிலம்பும்‌ ஆம்‌ பொய்கைப்‌பாச்சிலாச்சிராமத்து அடிகள்‌ என்று இவர் தாம்‌ பலரையும்‌ ஆட்கொள்வர்‌; பரிந்து ஓர்‌பேச்சு இலர்‌; ஒன்றைத்‌ தர இலர்‌ ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை வாட்டிய வகையின ரேனும்புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை போகும்நாள் வீழும்நா ளாகிப்பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாதுசொன் னாலும்பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
வரிந்த வெஞ்சிலையால்‌ அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்‌,“புரிந்த அந்‌ நாளே புகழ்தக்க; அடிமை போகும்‌ நாள்‌ வீழும்‌ நாள்‌” ஆகிப்பரிந்தவர்க்கு அருள்செய்‌ பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம்‌, யாது சொன்னாலும்‌,பிரிந்து இறைப்போதில்‌ பேர்வதே ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்தீவினை செற்றிடு மென்றுஅடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்ஆவதும் அறிவரெம் மடிகள்படைத்தலைச் சூலம் பற்றிய கையர்பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
செடித்‌ தவம்‌ செய்வார்‌ சென்றுழிச்‌ செல்லேன்‌; 'தீவினை செற்றிடும்‌' என்றுஅடித்தவம்‌ அல்லால்‌ ஆரையும்‌ அறியேன்‌; ஆவதும்‌ அறிவர்‌, எம்‌ அடிகள்‌;படைத்தலைச்‌ சூலம்‌ பற்றிய கையர்‌, பாச்சிலாச்சிராமத்து எம்‌ பரமர்‌,பிடித்த வெண்‌ நீறே பூசுவதுஆனால்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கையது கபாலங் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் வெண்டிங்கள் சூடிய விகிர்தர்பையர வல்குற் பாவைய ராடும் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
கையது கபாலம்‌; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம்‌ ஏந்திய கையர்‌;மெய்யது புரிநூல்‌; மிளிரும்‌ புன்சடை மேல்‌ வெண் திங்கள்‌ சூடிய விகிர்தர்‌;பைஅரவு அல்குல்‌ பாவையர்‌ ஆடும்‌ பாச்சிலாச்சிராமத்து எம்‌ பரமர்‌;மெய்யரே ஒத்து ஓர்‌ பொய்‌ செய்வது ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன் நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங் கருத்தினாற் கைதொழு தெழுவேன்பணம்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
நிணம்‌ படும்‌ உடலை நிலைமை என்று ஓரேன்‌; நெஞ்சமே தஞ்சம்‌ என்று இருந்தேன்‌;கணம்‌ படிந்து ஏத்தி, கங்குலும்‌ பகலும்‌ கருத்தினால்‌ கைதொழுது எழுவேன்‌;பணம்‌ படும்‌ அரவம்‌ பற்றிய கையர்‌, பாச்சிலாச்சிராமத்து எம்‌ பரமர்‌,பிணம்‌ படு காட்டில்‌ ஆடுவது ஆகில்‌ இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே குற்றேவல் நாடொறுஞ் செய்வான்இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் எம்பெரு மானென்றெப் போதும்அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தாம் யாதுசொன் னாலும்பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
குழைத்து வந்து ஓடிக்‌ கூடுதி, நெஞ்சே! குற்றேவல்‌ நாள்தொறும்‌ செய்வான்‌;இழைத்த நாள்‌ கடவார்‌; அன்பிலரேனும்‌, “எம்பெருமான்‌!” என்று எப்போதும்‌அழைத்தவர்க்கு அருள் செய்‌ பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம்‌, யாது சொன்னாலும்‌,பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலர்‌ ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்மணிப்படு கண்டனை வாயினாற் கூறி மனத்தினாற் றொண்டனேன் நினைவேன்பணிப்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
துணிப்படும்‌ உடையும்‌ சுண்ணவெண்‌ நீறும்‌ தோற்றமும்‌ சிந்தித்துக்‌ காணில்‌,மணிப்‌ படு கண்டனை வாயினால்‌ கூறி, மனத்தினால்‌ தொண்டனேன்‌ நினைவேன்‌;பணிப்‌ படும்‌ அரவம்‌ பற்றிய கையர்‌, பாச்சிலாச்சிராமத்து எம்‌ பரமர்‌,பிணிப்பட ஆண்டு, பணிப்பிலர்‌ ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனும் ஆனேன்உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய்அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி லாச்சிரா மத்தெம் மடிகள்பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
ஒருமையே அல்லேன்‌, எழுமையும்‌ அடியேன்‌; அடியவர்க்கு அடியனும்‌ ஆனேன்‌;உரிமையால்‌ உரியேன்‌; உள்ளமும்‌ உருகும்‌; ஒண்‌ மலர்ச்சேவடி காட்டாய்‌;அருமை ஆம்‌ புகழார்க்கு அருள் செயும்‌ பாச்சிலாச்சிராமத்து எம்‌ அடிகள்‌,பெருமைகள்‌ பேசிச்‌ சிறுமைகள்‌ செய்யில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென்றெப் போதும்பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் தடிகளை அடிதொழப் பன்னாள்வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவலா ரூரன்பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
சொற்பிரிப்பு
ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; “எம்பெருமான்‌!' என்று எப்போதும்‌பாயின புகழான்‌, பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப்‌ பல்‌ நாள்‌வாயினால்‌ கூறி மனத்தினால்‌ நினைவான்‌, வள வயல்‌ நாவல்‌ ஆரூரன்‌,பேசின பேச்சைப்‌ பொறுக்கிலர்‌ ஆகில்‌, இவர்‌ அலாது இல்லையோ, பிரானார்‌?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.