திருமுறை 7 · 7.013 · 11

திருத்துறையூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கராகம்
தலம்
துறையூர்
நாடு
நடுநாடு

1

மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்கலையார் அல்குற்கன் னியர் ஆடும்துறையூர்த்தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
மலை ஆர்‌ அருவித் திரள்‌ மா மணி உந்தி,குலை ஆரக்‌ கொணர்ந்து எற்றி, ஒர்‌ பெண்ணை வடபால்‌,கலை ஆர்‌ அல்குல்‌ கன்னியர்‌ ஆடும்‌, துறையூர்த்‌தலைவா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்திமுத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
மத்தம் மதயானையின்‌ வெண்மருப்பு உந்தி,முத்தம்‌ கொணர்ந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,பத்தர்‌ பயின்று ஏத்திப் ‌ பரவும்‌, துறையூர்‌அத்தா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கந்தங் கமழ்கா ரகில்சந் தனம் உந்திச்செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்மந்தி பலமா நடமாடுந் துறையூர்எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
கந்தம்‌ கமழ்‌ கார்‌ அகில் ‌ சந்தனம்‌ உந்திச்‌செந்தண் புனல்‌ வந்து இழி பெண்ணை வடபால்‌,மந்தி பல மா நடம்‌ ஆடும்‌, துறையூர்‌எந்தாய்‌! உனை வேண்டிக்‌ கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்கரும்பார் மொழிக்கன் னியர்ஆடுந் துறையூர்விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம்‌ சாடி,சுரும்பு ஆரக்‌ கொணர்ந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,கரும்பு ஆர்‌ மொழிக்‌ கன்னியர்‌ ஆடும்‌, துறையூர்‌விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பாடார்ந் தனமாவும் பலாக்க ளும்சாடிநாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
பாடு ஆர்ந்தன மாவும்‌ பலாக்களும்‌ சாடி,நாடு ஆர வந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,மாடு ஆர்ந்தன மாளிகை சூழும்‌, துறையூர்‌வேடா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடிமொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்கொட்டாட் டொடுபாட் டொலிஓவாத் துறையூர்ச்சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
மட்டு ஆர்‌ மலர்க் கொன்றையும்‌ வன்னியும்‌ சாடி,மொட்டு ஆரக்‌ கொணர்ந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச்‌சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரைஉந்தித்தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்போதார்ந்தன பொய்கைகள் சூழுந் துறையூர்நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
மாது ஆர்‌ மயில் பீலியும்‌ வெண்நுரை உந்தி,தாது ஆரக்‌ கொணர்ந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,போது ஆர்ந்தன பொய்கைகள் ‌ சூழும்‌, துறையூர்‌நாதா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கொய்யா மலர்க்கோங் கொடுவேங் கையுஞ்சாடிச்செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்மையார் தடங்கண் ணியர்ஆடுந் துறையூர்ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும்‌ சாடி,செய்‌ ஆரக்‌ கொணர்ந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,மை ஆர்‌ தடங் கண்ணியர்‌ ஆடும்‌, துறையூர்‌ஐயா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விண்ணார்ந்தன மேகங்கள் நின்றுபொழியமண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்பண்ணார் மொழிப் பாவையர் ஆடும்துறையூர்அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
விண்‌ ஆர்ந்தன மேகங்கள் ‌ நின்று பொழிய,மண்‌ ஆரக்‌ கொணர்ந்து எற்றி, ஓர்‌ பெண்ணை வடபால்‌,பண்‌ ஆர்‌ மொழிப் ‌ பாவையர்‌ ஆடும்‌, துறையூர்‌அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்பூவார்ந்தன பொய்கைகள் சூழும்துறையூர்த்தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
சொற்பிரிப்பு
மா வாய்‌ பிளந்தானும்‌, மலர் மிசையானும்‌,ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்‌;பூ ஆர்ந்தன பொய்கைகள் ‌ சூழும்‌ துறையூர்த்‌தேவா! உனை வேண்டிக் கொள்வேன்‌, தவநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

செய்யார் கமல மலர்நாவ லூர் மன்னன்கையால் தொழுதேத்தப் படுந்துறை யூர்மேல்பொய்யாத் தமிழ்ஊரன் உரைத்தன வல்லார்மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.
சொற்பிரிப்பு
செய்‌ ஆர்‌ கமலம்‌ மலர்‌ நாவலூர்‌ மன்னன்‌,கையால்‌ தொழுது ஏத்தப்படும்‌ துறையூர் மேல்‌பொய்யாத்‌ தமிழ்‌ ஊரன்‌, உரைத்தன வல்லார்‌,மெய்யே பெறுவார்கள்‌, தவநெறி தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.