1
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மானதி டந்திக ழைங்கணையக்கோனை யெரித்தெரி யாடி யிடங்குல வான திடங்குறை யாமறையாமானை இடத்ததோர் கையனி டம்மத மாறு படப்பொழி யும்மலைபோல்யானை யுரித்த பிரான திடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை எம்பெருமானது இடம்; திகழ் ஐங்கணை அக்கோனை எரித்து எரி ஆடி இடம்; குலவானது இடம்; குறையா மறை ஆம்மானை இடத்தது ஓர் கையன் இடம்; மதம் . மாறுபடப் பொழியும் மலை போல்யானை உரித்த பிரானது இடம்- கலிக் கச்சி அனேகதங்காவதமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.