திருமுறை 7 · 7.009 · 11

திருஅரிசிற்கரைப்புத்தூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
இந்தளம்
தலம்
அரிசிற்கரைப்புத்தூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர் எரித்தீர் வருமுப் புரங்கள்சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர் சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக் கலவம் மயிற்பீலியுங் காரகிலும்அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
சொற்பிரிப்பு
மலைக்கு மகள்‌ அஞ்ச மதகரியை உரித்தீர்‌; எரித்தீர்‌, வரு முப்புரங்கள்‌ ;சிலைக்கும்‌ கொலைச்‌ சே உகந்து ஏறு ஒழியீர்‌; சில் பலிக்கு இல்கள் தொறும்‌ செலவு ஒழியீர்‌கலைக் கொம்பும்‌ கரி மருப்பும்‌ இடறி, கலவம் மயில் பீலியும்‌ கார்‌ அகிலும்‌அலைக்கும்‌ புனல்‌ சேர்‌ அரிசில்‌ தென்கரை அழகு ஆர்‌ திருப்புத்தூர்‌ அழகனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத் தீரழற் சூலத்தில் அந்தகனைத்திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப் பாகிய பூசனை செய்பொழுதில்ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறை வாகவோர் கண்மலர் சூட்டலுமேபொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழி லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
சொற்பிரிப்பு
அரு மலரோன்‌ சிரம்‌ ஒன்று அறுத்தீர்‌; செறுத்தீர்‌, அழல் சூலத்தில்‌ அந்தகனை;திருமகள் கோன்‌ நெடுமால்‌ பல நாள்‌ சிறப்பு ஆகிய பூசனை செய்‌ பொழுதில்‌,ஒரு மலர்‌ ஆயிரத்தில்‌ குறைவா, நிறைவு ஆக ஓர்‌ கண்மலர்‌ சூட்டலுமே,பொரு விறல்‌ ஆழி புரிந்து அளித்தீர்‌ பொழில்‌ ஆர்‌ திருப்புத்தூர்ப்‌ புனிதனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ் சந்திரன் சவிதாவிய மானனானீர்சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித் தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும் முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதிஅரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
சொற்பிரிப்பு
தரிக்கும்‌ தரை, நீர்‌, தழல்‌, காற்று, அந்தரம்‌, சந்திரன்‌, சவிதா, இயமானன்‌, ஆனீர்‌;சரிக்கும்‌ பலிக்குத்‌ தலை அங்கை ஏந்தி, தையலார்‌ பெய்ய, கொள்வது தக்கது அன்றால்‌முரிக்கும்‌ தளிர்ச்‌ சந்தனத்தொடு, வேயும்‌, முழங்கும்‌ திரைக் கைகளால்‌ வாரி மோதிஅரிக்கும்‌ புனல்‌ சேர்‌ அரிசில்‌ தென்கரை அழகு ஆர்‌ திருப்புத்தூர்‌ அழகனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம் வில்லா நாணியிற் கோலொன்றினால்இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கார் எதிரெம் பெருமான்கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக் காமனை வேவக் கடைக்கண்ணினாற்பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
சொற்பிரிப்பு
கொடி உடை மும்மதில்‌ வெந்து அழிய, குன்றம்‌ வில்லா, நாணியின்‌ கோல்‌ ஒன்றினால்‌இடிபட எய்து எரித்தீர்‌, இமைக்கும்‌ அளவில்‌; உமக்கு ஆர்‌ எதிர்‌? எம்பெருமான்‌!கடி படு பூங்கணையான்‌, கருப்புச் சிலைக்‌ காமனை, வேவக்‌ கடைக் கண்ணினால்‌பொடிபட நோக்கியது என்னை கொல்லோ? பொழில்‌ ஆர்‌ திருப்புத்தூர்ப்‌ புனிதனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும் வானவர் தானவர் மாமுனிவர்உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னே உலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்இணங்கிக் கயல்சேல் இளவாளை பாய இனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
சொற்பிரிப்பு
வணங்கித்‌ தொழுவார்‌ அவர்‌, மால்‌, பிரமன்‌, மற்றும்‌ வானவர்‌, தானவர்‌, மா முனிவர்‌;உணங்கல்‌ தலையில்‌ பலி கொண்டல்‌ என்னே? உலகங்கள்‌ எல்லாம்‌ உடையீர்‌, உரையீர்‌!இணங்கிக்‌ கயல்‌ சேல்‌ இள வாளை பாய, இனக் கெண்டை துள்ள, கண்டிருந்த அன்னம்‌அணங்கிக்‌ குணம்‌ கொள்‌ அரிசில்‌ தென்கரை அழகு ஆர்‌ திருப்புத்தூர்‌ அழகனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரி சிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடி மேல்விழுத் திட்டு நடுங்குதலும்வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வரு மென்றொரு காசினை நின்றநன்றிப்புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழி லார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
சொற்பிரிப்பு
அகத்து அடிமை செயும்‌ அந்தணன் தான்‌, அரிசில் புனல்‌ கொண்டு வந்து ஆட்டுகின்றான்‌,மிகத்‌ தளர்வு எய்தி, குடத்தையும்‌ நும்‌ முடி மேல்‌ விழுத்திட்டு, நடுங்குதலும்‌,வகுத்து அவனுக்கு, "நித்தல்‌ படியும்‌ வரும்‌” என்று ஒரு காசினை நின்ற நன்றிப்‌புகழ்த்துணை கைப்‌ புகச் செய்து உகந்தீர்‌ பொழில்‌ ஆர்‌ திருப்புத்தூர்ப்‌ புனிதனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப் பகலோன்முத லாப்பல தேவரையுந்தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கை என்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்தி விளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றிஅழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
சொற்பிரிப்பு
பழிக்கும்‌ பெருந்‌ தக்கன்‌ எச்சம்‌ அழிய, பகலோன்‌ முதலாப்‌ பல தேவரையும்‌தெழித்திட்டு, அவர்‌ அங்கம்‌ சிதைத்தருளும்‌ செய்கை என்னைகொலோ? மைகொள்‌ செம்‌ மிடற்றீர்‌!விழிக்கும்‌ தழைப் பீலியொடு ஏலம்‌ உந்தி, விளங்கும்‌ மணி முத்தொடு பொன்‌ வரன்றி,அழிக்கும்‌ புனல்‌ சேர்‌ அரிசில்‌ தென்கரை அழகு ஆர்‌ திருப்புத்தூர்‌ அழகனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் பெருங்கா டரங்காகநின் றாடலென்னேகறைக்கொள் மணிகண் டமுந்திண் டோள்களுங் கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
சொற்பிரிப்பு
பறைக் கண்‌ நெடும்‌ பேய்க்கணம்‌ பாடல் செய்ய, குறள் பாரிடங்கள்‌ பறை தாம்‌ முழக்க,பிறைக்‌ கொள்‌ சடை தாழ, பெயர்ந்து, நட்டம்‌, பெருங்காடு அரங்கு ஆக நின்று, ஆடல்‌ என்னே?கறைக்‌ கொள்‌ மணிகண்டமும்‌, திண் தோள்களும்‌, கரங்கள்‌, சிரம் தன்னிலும்‌, கச்சும்‌ ஆகப்‌பொறிக்‌ கொள்‌ அரவம்‌ புனைந்தீர்‌, பலவும்‌; பொழில்‌ ஆர்‌ திருப்புத்தூர்ப்‌ புனிதனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்முழைக்கொள் அரவோ டென்பணி கலனா முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோகழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங் கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
சொற்பிரிப்பு
மழைக்‌ கண்‌ மடவாளை ஓர் பாகம்‌ வைத்தீர்‌; வளர் புன் சடைக்‌ கங்கையை வைத்து உகந்தீர்‌;முழைக்‌ கொள்‌ அரவொடு என்பு அணிகலனா, முழுநீறு மெய்‌ பூசுதல்‌ என்னைகொலோ?கழைக்‌ கொள்‌ கரும்பும்‌, கதலிக் கனியும்‌, கமுகின்‌ பழுக்காயும்‌, கவர்ந்து கொண்டு இட்டு,அழைக்கும்‌ புனல்‌ சேர்‌ அரிசில்‌ தென்கரை அழகு ஆர்‌ திருப்புத்தூர்‌ அழகனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலைக் கடையவெழு காளகூடம்ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி இருபாலுமோடி இரைக்குந் திரைக்கைஅடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
சொற்பிரிப்பு
கடிக்கும்‌ அரவால்‌ மலையால்‌ அமரர்‌ கடலைக்‌ கடைய, எழு காளகூடம்‌ஒடிக்கும்‌, உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்‌; உமிழீர்‌இடிக்கும்‌ மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும்‌ ஓடி, இரைக்கும்‌ திரைக்கைஅடிக்கும்‌ புனல்‌ சேர்‌ அரிசில்‌ தென்கரை அழகு ஆர்‌ திருப்புத்தூர்‌ அழகனீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

காரூர் மழைபெய்து பொழியரு விக்கழை யோடகி லுந்திட் டிருகரையும்போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மைஆரூரன் அருந்தமி ழைந்தினொ டைந்தழ காலுரைப் பார்களுங் கேட்பவருஞ்சீரூர் தருதேவர் கணங்க ளொடும் இணங்கிச் சிவலோகம தெய்துவரே.
சொற்பிரிப்பு
கார்‌ ஊர்‌ மழை பெய்து பொழி அருவிக்‌ கழையோடு அகில்‌ உந்திட்டு இரு கரையும்‌போர்‌ ஊர்‌ புனல்‌ சேர்‌ அரிசில்‌ தென்கரைப்‌ பொழில்‌ ஆர்‌ திருப்புத்தூர்ப்‌ புனிதர் தம்மை,ஆரூரன்‌ அருந்தமிழ்‌ ஐந்தினொடு ஐந்து அழகால்‌ உரைப்பார்களும்‌ கேட்பவரும்‌,சீர்‌ ஊர் தரு தேவர் கணங்களொடும்‌ இணங்கி, சிவலோகம்‌ அது எய்துவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.