திருமுறை 7 · 7.008 · 10

திருவாரூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
இந்தளம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வுபறைகிழித் தனைய போர்வை பற்றியான் நோக்கி னேற்குத்திறைகொணர்ந் தீண்டித் தேவர் செம்பொனும் மணியுந் தூவிஅறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
இறைகளோடு இசைந்த இன்பம்‌, இன்பத்தோடு இசைந்த வாழ்வு,பறை கிழித்தனைய போர்வை பற்றி யான்‌ நோக்கினேற்கு,திறை கொணர்ந்து ஈண்டி, தேவர்‌, செம்பொனும்‌ மணியும்‌ தூவி,அறைகழல்‌ இறைஞ்சும்‌ ஆரூர்‌ அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொரு ளிலாத மாயம்மான்மறித் தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கு மிந்தமானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்ஆனல்வெள் ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
ஊன்மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள்‌ இலாத மாயம்‌;மான்‌ மறித்தனைய நோக்கின் ‌ மடந்தைமார்‌ மதிக்கும்‌ இந்தமானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர்‌ வாழ்வு வேண்டேன்‌;ஆன்‌ நல் வெள்‌ ஏற்ற ஆரூர் ‌அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோ டஞ்சு நான்குந்துறுபறித் தனைய நோக்கிச் சொல்லிற்றொன் றாகச் சொல்லார்நறுமலர்ப் பூவும் நீரும் நாடொறும் வணங்கு வார்க்குஅறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
அறுபதும் பத்தும்‌, எட்டும்‌, ஆறினோடு அஞ்சு நான்கும்‌,துறு பறித்தனைய நோக்கின் ‌ சொல்லிற்று ஒன்று ஆகச்‌ சொல்லார்‌; .நறுமலர்ப் பூவும்‌ நீரும் ‌ நாள்தொறும்‌ வணங்குவார்க்குஅறிவினைக்‌ கொடுக்கும்‌ ஆரூர்‌ அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வுநல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தே னல்லேன்மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி யெங்கும்அல்லிவண் டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
சொல்லிடில்‌ எல்லை இல்லை, சுவை இலாப்‌ பேதை வாழ்வு;நல்லது ஓர்‌ கூரை புக்கு நலம்‌ மிக அறிந்தேன்‌. அல்லேன்‌;மல்லிகை மாடம்‌ நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்‌அல்லி வண்டு இயங்கும்‌ ஆரூர்‌ அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நரம்பினோ டெலும்பு கட்டி நசையினோ டிசைவொன் றில்லாக்குரம்பைவாய்க் குடியி ருந்து குலத்தினால் வாழ மாட்டேன்விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும்அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக்‌குரம்பைவாய்க்‌ குடி இருந்து குலத்தினால்‌ வாழமாட்டேன்‌;விரும்பிய கமழும்‌ புன்னை மாதவித் தொகுதி என்றும்‌அரும்பு வாய்‌ மலரும்‌ ஆரூர் ‌ அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம்பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்பணையிடைச் சோலை தோறும் பைம்பொழில் விளாகத் தெங்கள்அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
மணம்‌ என மகிழ்வர்‌, முன்னே, மக்கள்‌ தாய்‌ தந்தை சுற்றம்‌,பிணம்‌ எனச்‌ சுடுவர்‌, பேர்த்தே; பிறவியை வேண்டேன்‌, நாயேன்‌;பணை இடைச்‌ சோலை தோறும்‌ பைம்பொழில்‌ வளாகத்து எங்கள்‌அணைவினைக்‌ கொடுக்கும்‌ ஆரூர் ‌அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தாழ்வெனுந் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்துவாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கொன் றீய கில்லார்ஆழ்குழிப் பட்ட போது அலக்கணில் ஒருவர்க் காவர்யாழ்முயன் றிருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
தாழ்வு எனும்‌ தன்மை விட்டு, தனத்தையே மனத்தில்‌ வைத்து,வாழ்வதே கருதி, தொண்டர் ‌ மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்‌;ஆழ்‌ குழிப்பட்டபோது, அலக்கணில்‌, ஒருவர்க்கு ஆவர்‌:யாழ்‌ முயன்று இருக்கும்‌ ஆரூர் ‌ அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல்வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்கரியமால் அயனுந் தேடிக் கழலிணை காண மாட்டாஅரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
உதிரம் நீர்‌ இறைச்சிக் குப்பை எடுத்தது மலக் குகை மேல்‌வருவது ஓர்‌ மாயக்‌ கூரை வாழ்வது ஓர்‌ வாழ்வு வேண்டேன்‌;கரிய மால்‌, அயனும்‌, தேடிக் ‌ கழலிணை காணமாட்டாஅரியனாய்‌ நின்ற ஆரூர்‌ அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொய்த்தன்மைத் தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும்வித்தகத் தாய வாழ்வு வேண்டிநான் விரும்ப கில்லேன்முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வணங்கு வார்க்குஅத்தன்மைத் தாகும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
சொற்பிரிப்பு
பொய்த் தன்மைத்து ஆய மாயப் போர்வையை, மெய்‌ என்று எண்ணும்‌வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான்‌ விரும்பகில்லேன்‌ ;முத்தினைத்‌ தொழுது, நாளும் ‌ முடிகளால்‌ வணங்குவார்க்குஅத்‌தன்மைத்து ஆகும்‌ ஆரூர் ‌அப்பனே! அஞ்சினேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தஞ்சொலார் அருள் பயக்குந் தமியனேன் தடமு லைக்கண்அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச்செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்நஞ்சுலாங் கண்டத் தெங்கள் நாதனை நணுகு வாரே.
சொற்பிரிப்பு
தம்‌ சொல்‌ ஆர்‌ அருள்‌ பயக்கும்‌ தமியனேன்‌, தட முலைக்கண்‌அம்‌ சொலார்‌ பயிலும்‌ ஆரூர் ‌ அப்பனை, ஊரன்‌ அஞ்சிசெஞ்சொலால்‌ நயந்த பாடல் ‌ சிந்தியா ஏத்த வல்லார்‌,நஞ்சு உலாம்‌ கண்டத்து எங்கள் ‌ நாதனை நண்ணுவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.