திருமுறை 7 · 7.007 · 11

திருஎதிர்கொள்பாடி

அருளியவர்
சுந்தரர்
பண்
இந்தளம்
தலம்
எதிர்கொள்பாடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரேஅத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
மத்த யானை ஏறி, மன்னர்‌ சூழ வருவீர்காள்‌!செத்த போதில்‌ ஆரும்‌ இல்லை; சிந்தையுள்‌ வைம்மின்கள்‌!வைத்த உள்ளம்‌ மாற்ற வேண்டா; வம்மின்‌, மனத்தீரே!அத்தர்‌ கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கைமாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரேநீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
தோற்றம்‌ உண்டேல்‌, மரணம்‌ உண்டு; துயரம்‌, மனை வாழ்க்கை;மாற்றம்‌ உண்டேல்‌, வஞ்சம்‌ உண்டு; நெஞ்ச மனத்தீரே!நீற்றர்‌, ஏற்றர்‌, நீலகண்டர்‌, நிறைபுனல்‌ நீள் சடைமேல்‌ஏற்றார்‌, கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

செடிகொ ளாக்கை சென்று சென்று தேய்ந்தொல் லைவீழாமுன்வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் பட்டு மயங்காதேகொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடைஅடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
செடி கொள்‌ ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்‌ ,வடி கொள்‌ கண்ணார்‌ வஞ்சனையுள் ‌ பட்டு மயங்காதே,கொடி கொள்‌ ஏற்றர்‌, வெள்ளை நீற்றர்‌, கோவண ஆடை உடைஅடிகள்‌, கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரேயாவ ராலும் இகழப் பட்டிங் கல்ல லில்வீழாதேமூவ ராயும் இருவ ராயும் முதல்வன் அவனேயாம்தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
வாழ்வர் கண்டீர்‌, நம்முள்‌ ஐவர்‌; வஞ்ச மனத்தீரே!யாவராலும்‌ இகழப்பட்டு, இங்கு அல்லலில்‌ வீழாதே,மூவராயும்‌ இருவராயும் ‌ முதல்வன்‌ அவனே ஆம்‌தேவர்‌ கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப் பான்பொருட்டாற்சிரித்த பல்வாய் வெண்ட லைபோய் ஊர்ப்பு றஞ்சேராமுன்வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர் வஞ்ச மதில்மூன்றும்எரித்த வில்லி எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
அரித்து நம்மேல்‌ ஐவர்‌ வந்து, இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால்‌,சிரித்த பல்வாய் வெண்தலை போய்‌ ஊர்ப் புறம்‌ சேரா முன்‌,வரிக்‌ கொள்‌ துத்தி வாள்‌ அரக்கர் ‌ வஞ்சம்‌ மதில் மூன்றும்‌எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால்மையல் கொண்டீர் எம்மோ டாடி நீரும் மனத்தீரேநைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும்ஐயர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
பொய்யர் கண்டீர்‌, வாழ்க்கையாளர்‌; பொத்து அடைப்பான் பொருட்டால்‌மையல்‌ கொண்டீர்‌; எம்மோடு ஆடி நீரும்‌, மனத்தீரே!நைய வேண்டா; இம்மை ஏத்த, அம்மை நமக்கு அருளும்‌ஐயர்‌ கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கிவாசம் மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கைஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும்ஈசர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
கூசம்‌ நீக்கி, குற்றம்‌ நீக்கி, செற்றம்‌ மனம்‌ நீக்கி,வாசம்‌ மல்கு குழலினார்கள் ‌ வஞ்சம்‌ மனை வாழ்க்கைஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும்‌ஈசர்‌ கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கைமுன்பு சொன்னால் மோழை மையாம் முட்டை மனத்தீரேஅன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார்என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
இன்பம்‌ உண்டேல்‌, துன்பம்‌ உண்டு; ஏழை, மனை வாழ்க்கை;முன்பு சொன்ன மோழைமையால்‌, முட்டை மனத்தீரே!அன்பர்‌ அல்லால்‌, அணி கொள்‌ கொன்றை அடிகள்‌ அடி சேரார்‌;என்பர்‌ கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ்சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
தந்தையாரும்‌ தவ்வையாரும் ‌ எள்‌-தனைச்‌ சார்வு ஆகார்‌;வந்து நம்மோடு உள்‌ அளாவி வானநெறி காட்டும்‌சிந்தையீரே! நெஞ்சினீரே! திகழ்‌ மதியம்‌ சூடும்‌எந்தை கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குருதி சோர ஆனையின் றோல் கொண்ட குழற்சடையன்மருது கீறி ஊடு போன மாலய னும்மறியாச்சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதியெம் ஆதியான்கருது கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
சொற்பிரிப்பு
குருதி சோர ஆனையின் தோல்‌ கொண்ட குழல் சடையன்‌;மருது கீறி ஊடு போன மால்‌, அயனும்‌, அறியா,சுருதியார்க்கும்‌ சொல்ல ஒண்ணா, சோதி; எம்‌ ஆதியான்‌;கருது கோயில்‌ எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யான்உறையும்பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனை யேபணியச்சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடைய னவன்சிறுவன்பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே.
சொற்பிரிப்பு
முத்து நீற்றுப்‌ பவள மேனிச் ‌ செஞ்சடையான்‌ உறையும்‌பத்தர்‌ பந்தந்து எதிர்கொள்பாடிப் ‌ பரமனையே பணியச்‌சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்‌ சடையன்‌ அவன் சிறுவன்;பத்தன்‌, ஊரன் பாடல்‌ வல்லார் ‌ பாதம்‌ பணிவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.