1
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் பாய்பு லித்தோல் அரையில் வீக்கிஅடங்க லார்ஊர் எரியச் சீறி அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்மடங்க லானைச் செற்று கந்தீர் மனைகள் தோறுந் தலைகை யேந்திவிடங்க ராகித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே.
சொற்பிரிப்பு
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் ;மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள் தோறும் தலை கை ஏந்திவிடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.