திருமுறை 7 · 7.005 · 10

திருஓணகாந்தன்றளி

அருளியவர்
சுந்தரர்
பண்
இந்தளம்
தலம்
கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார்கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யின் அல்லால்ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
நெய்யும்‌ பாலும்‌ தயிரும்‌ கொண்டு நித்தல்‌ பூசனை செய்யல் உற்றார்‌;கையில்‌ ஒன்றும்‌ காணம்‌ இல்லை, கழல்‌ அடி தொழுது உய்யின்‌ அல்லால்‌;ஐவர்‌ கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,உய்யும்‌ ஆறு ஒன்று அருளிச்செய்யீர்‌ ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் திரைகள் வந்து புரள வீசுங்கங்கை யாளேல் வாய்தி றவாள் கணப தியேல் வயிறு தாரிஅங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவி யார்கோற் றட்டி யாளார்உங்க ளுக்காட் செய்ய மாட்டோம் ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
திங்கள்‌ தங்கு சடையின்மேல்‌ ஓர்‌ திரைகள்‌ வந்து புரள வீசும்‌கங்கையாளேல்‌, வாய்‌ திறவாள்‌; கணபதியேல்‌, வயிறுதாரி;அம்‌ கை வேலோன் குமரன்‌, பிள்ளை; தேவியார்‌ கோல் தட்டி ஆளார்;உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம்‌ ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி யும்கழல் ஏத்து வார்கள்மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி மதியு டையவர் செய்கை செய்யீர்அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத் தடிகேள் உம்மைஒற்றி வைத்திங் குண்ண லாமோ ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
பெற்ற போழ்தும்‌ பெறாத போழ்தும்‌, பேணி உன்‌ கழல்‌ ஏத்துவார்கள்‌“மற்று ஓர்‌ பற்று இலர்‌”* என்று இரங்கி, மதி உடையவர்‌ செய்கை செய்யீர்‌;அற்ற போழ்தும்‌ அலந்த போழ்தும்‌, ஆவற்காலத்து, அடிகேள்‌! உம்மைஒற்றிவைத்து இங்கு உண்ணல்‌ ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்றில்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்பல்லை யுக்கப் படுத லையிற் பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
வல்லது எல்லாம்‌ சொல்லி உம்மை வாழ்த்தினாலும்‌, வாய்‌ திறந்து ஒன்றுஇல்லை என்னீர்‌; உண்டும்‌ என்னீர்‌; எம்மை ஆள்வான்‌ இருப்பது என்‌, நீர்‌?பல்லை உக்க படுதலையில்‌ பகல்‌ எலாம்‌ போய்ப்‌ பலி திரிந்து இங்குஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர்‌ ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைப டாமேஆடிப் பாடி அழுது நெக்கங் கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
கூடிக்கூடித்‌ தொண்டர்‌ தங்கள் ‌ கொண்ட பாணி குறைபடாமே,ஆடிப்‌ பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம்‌ ஓரீர்‌;தேடித்தேடித்‌ திரிந்து எய்த்தாலும்‌ சித்தம்‌ என்பால்‌ வைக்கமாட்டீர்‌;ஓடிப்‌ போகீர்‌; பற்றும்‌ தாரீர்‌ ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண் மலைம கள்மது விம்மு கொன்றைத்தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்ய வைத்தகாரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய்ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
வார்‌ இருங்குழல்‌, மை வாள் நெடுங்கண்‌ மலைமகள்‌ மது விம்மு கொன்றைத்‌தார்‌ இருந்‌தட மார்பு நீங்காத்‌ தையலாள்‌ உலகு உய்ய வைத்த,கார்‌ இரும்‌ பொழில்‌, கச்சி மூதூர்க்‌ காமக்கோட்டம்‌ உண்டாக, நீர்‌ போய்‌ஊர்‌ இடும்‌ பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொய்ம்மை யாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லைமெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் மேலை நாளொன் றிடவுங் கில்லீர்எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்உம்மை அன்றே எம்பெ ருமான் ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
பொய்ம்மையாலே போது போக்கிப்‌ புறத்தும்‌ இல்லை; அகத்தும்‌ இல்லை;மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்‌ மேலைநாள்‌ ஒன்று இடவும்‌ கில்லீர்‌;எம்மைப்‌ பெற்றால்‌ ஏதும்‌ வேண்டீர்‌; ஏதும்‌ தாரீர்‌; ஏதும்‌ ஓதீர்‌;உம்மை அன்றே, எம்பெருமான்‌ ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வலையம் வைத்த கூற்ற மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டுச்சிலைஅ மைத்த சிந்தை யாலே திருவ டிதொழு துய்யி னல்லாற்கலைஅ மைத்த காமச் செற்றக் குரோத லோப மதவ ரூடைஉலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன் ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
வலையம்‌ வைத்த கூற்றம்‌ ஈர்வான்‌ வந்து நின்ற வார்த்தை கேட்டு.சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின்‌ அல்லால்‌,கலை அமைத்த--காமச்‌ செற்றக்‌ குரோதலோபமதவர்‌ஊடுஉலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன்‌ ஓணகாந்தன்தளிஉளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வார மாகித் திருவ டிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னேஆரம் பாம்பு வாழ்வ தாரூர் ஒற்றி யூரேல் உம்ம தன்றுதார மாகக் கங்கை யாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம்ஊரும் காடு உடையும் தோலே ஓண காந்தன் தளியு ளீரே.
சொற்பிரிப்பு
வாரம்‌ ஆகித்‌ திருவடிக்குப்‌ பணி செய்‌ தொண்டர்‌ பெறுவது என்னே?ஆரம்‌ பாம்பு; வாழ்வது ஆரூர்‌ ஒற்றியூரேல்‌, உம்‌மது அன்று;தாரம்‌ ஆகக்‌ கங்கையாளைச்‌ சடையில் வைத்த அடிகேள்‌! உம் தம்‌ஊரும்‌ காடு; உடையும்‌ தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஓவ ணமேல் எருதொன் றேறும் ஓண காந்தன் றளியு ளார்தாம்ஆவ ணஞ்செய் தாளுங்கொண்ட வரைது கில்லொடு பட்டு வீக்கிக்கோவ ணமேற் கொண்ட வேடம் கோவை யாகஆ ரூரன் சொன்னபாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.
சொற்பிரிப்பு
ஓவணம்‌ ஏல்‌ எருது ஒன்று ஏறும்‌ ஓணகாந்தன் தளி உளார் தாம்‌ஆவணம்‌ செய்து, ஆளும்‌ கொண்டு அரை துகி(ல்‌)லொடு பட்டு வீக்கி,கோவணம்‌ மேற்கொண்ட வேடம்‌ கோவை ஆக ஆரூரன்‌ சொன்னபா வணத்‌ தமிழ் பத்தும்‌ வல்லார்க்குப்‌ பறையும்‌, தாம்‌ செய்த பாவம் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.