1
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னேஅலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னேமலைக்குந் நிகரொப் பனவன் திரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
சொற்பிரிப்பு
தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே? சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே?அலைக்கும். புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே? அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே?மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து, எற்றி, முழங்கி வலம்புரி கொண்டு,அலைக்கும் கடல் அம் கரைமேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.