1
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனேநல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
சொற்பிரிப்பு
கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரைமேல்நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நிலவெண் மதி சூடிய, நின்மலனே!'நல் வாய் இல் செய்தார், நடந்தார், உடுத்தார் நரைத்தார், இறந்தார்' என்று நானிலத்தில்சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.