1
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந் துன்ப மில்லைதாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
சொற்பிரிப்பு
நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;ஏமாப்போம்; பிணிஅறியோம்; பணிவோம் அல்லோம்; இன்பமே,- எந்நாளும் துன்பம் இல்லை;தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மை ஆன சங்கரன்,நல் சங்கவெண் குழைஓர் காதில்கோமாற்கே, நாம்என்றும் மீளா ஆள்ஆய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.