1
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் கழலடியே கைதொழுது காணி னல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
சொற்பிரிப்பு
எண்ணுகேன்; என்சொல்லி எண்ணு கேனோ, எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்?கண்இலேன்! மற்றுஓர் களைகண் இல்லேன்; கழல்அடியே கைதொழுது காணின் அல்லால்;ஒண்உளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்;புண்ணியா! உன்அடிக்கே போது கின்றேன்- பூம்புகலூர் மேவிய புண்ணி யனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.