திருமுறை 6 · 6.096 · 11

தனி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பொது
நாடு
பொது

1

ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மைவாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.
சொற்பிரிப்பு
ஆமயம்தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்;தாமரையோன் சிரம்அரிந்து கையில் கொண்டார்; தலைஅதனில் பலிகொண்டார்; நிறைவுஆம் தன்மைவாமனனார் மாகாயத்து உதிரம் கொண்டார்; மான்இடம்கொண் டார்;வலங்கை மழுவாள் கொண்டார்;காமனையும் உடல்கொண்டார்; கண்ணால் நோக்கிக்;- கண்ணப்பர் பணியும்கொள் கபாலி யாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார் செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார் சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார் அடியேனை ஆளுடைய அடிக ளாரே.
சொற்பிரிப்பு
முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்; முதுகேழல் முளைமருப்பும் கொண்டார், பூணாச்;செப்புஉருவம் முலைமலையாள் பாகம் கொண்டார்; செம்மேனி வெண்நீறு திகழக் கொண்டார்;துப்புரவுஆர் சுரிசங்கின் தோடு கொண்டார்; சுடர்முடிசூழ்ந்து, அடிஅமரர் தொழவும் கொண்டார்;அப்பலிகொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார்- அடியேனை ஆள்உடைய அடிக ளாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார் மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார் சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.
சொற்பிரிப்பு
முடிகொண்டார்; முளைஇளவெண் திங்க ளோடு மூசும்இள நாகம்உடன் ஆகக் கொண்டார்;அடிகொண்டார், சிலம்புஅலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்;வடிகொண்டுஆர்ந்து இலங்கும்மழு வலங்கைக் கொண்டார்; மாலைஇடப் பாகத்தே மருவக் கொண்டார்;துடிகொண்டார்; கங்காளம் தோள்மேல் கொண்டார்- சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண் டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார் பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார் அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார் கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.
சொற்பிரிப்பு
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்;அக்கினொடு படஅரவம் அரைமேல் கொண்டார்; அனைத்துஉலகும் படைத்துஅவையும் அடங்கக் கொண்டார்;கொக்குஇறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்; கொடியானை அடல்ஆழிக்கு இரையாக் கொண்டார்;செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்- செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார் சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார் சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.
சொற்பிரிப்பு
அந்தகனை அயில்சூலத்து அழுத்திக் கொண்டார்; அருமறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு நடம்ஆடும் இடமாக் கொண்டார்;மந்தரம்நல் பொருசிலையா வளைத்துக் கொண்டார்; மாகாளன் வாசல்காப்பு ஆகக் கொண்டார்;தந்திரமந் திரத்தராய் அருளிக் கொண்டார்- சமண்தீர்த்துஎன் தன்னைஆட் கொண்டார் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார் பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார் நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்வாரடங்கு வனமுலையார் மைய லாகி வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார் உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
சொற்பிரிப்பு
பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்; பவள நிறம்கொண்டார்; பளிங்கும் கொண்டார்;நீர்அடங்கு சடைமுடிமேல் நிலாவும் கொண்டார்; நீலநிறம் கோலம்நிறை மிடற்றில் கொண்டார்;வார்அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்துஇட்ட பலிகொண்டார்; வளையும் கொண்டார்;ஊர்அடங்க, ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்- உடல்உறுநோய் தீர்த்துஎன்னை ஆட்கொண் டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார் ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார் காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார் மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார் சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.
சொற்பிரிப்பு
அணிதில்லை அம்பலம்ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்;கணிவளர்தார்ப் பொன்இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல்ஆர் கோடிகலந்து இருக்கை கொண்டார்;மணிபணத்த அரவம்தோள் வளையாக் கொண்டார்; மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்;துணிபுலித்தோ லினைஆடை உடையாக் கொண்டார்- சூலம்கைக் கொண்டார்-தொண்டு எனைக்கொண் டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன் பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார் கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.
சொற்பிரிப்பு
படமூக்கப் பாம்புஅணையா னோடு, வானோன், பங்கயன்,என்று அங்குஅவரைப் படைத்துக் கொண்டார்;குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்றுஉதைத்துஓர் வேதியனை உய்யக் கொண்டார்;நெடுமூக்கின் கரியின்உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்;இடம்ஆக்கி இடைமருதும் கொண்டார், பண்டே;- என்னைஇந்நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார் இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார் விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்துஉச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார் அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.
சொற்பிரிப்பு
எச்சன்இணைத் தலைகொண்டார்; பகன்கண் கொண்டார்; இரவிகளில் ஒருவன்பல் இறுத்துக் கொண்டார்;மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்; விறல்அங்கி கரம்கொண்டார்; வேள்வி காத்து,உச்சநமன் தாள்அறுத்தார்; சந்திரனை உதைத்தார்; உணர்வுஇலாத் தக்கன்தன் வேள்வி எல்லாம்அச்சம்எழ அழித்துக்கொண்டு, அருளும் செய்தார்- அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார் சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார் காபால வேடங் கருதிக் கொண்டார்விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார் வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
சொற்பிரிப்பு
சடைஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்;உடைஒன்றில் புள்ளிஉழைத் தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்;கடைமுன்றில் பலிகொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்;விடைவென்றிக் கொடிஅதனில் மேவக் கொண்டார்- வெந்துயரம் தீர்த்துஎன்னை ஆட்கொண் டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார் தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்பராபரனென் பதுதமது பேராக் கொண்டார் பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணிஇராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார் இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
சொற்பிரிப்பு
குராமலரோடு, அரா,மதியம், சடைமேல் கொண்டார்; குடமுழ,நந் தீசனை,வா சகனாக் கொண்டார்;சிராமலைதம் சேர்வுஇடமாத் திருந்தக் கொண்டார்; தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்;பராபரன்என் பதுதமது பேராக் கொண்டார்; பருப்பதம் கைக்கொண்டார்; பயங்கள் பண்ணிஇராவணன்என்று அவனைப்பேர் இயம்பக் கொண்டார்- இடர்உறுநோய் தீர்த்துஎன்னை ஆட்கொண் டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.