திருமுறை 6 · 6.095 · 10

தனி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பொது
நாடு
பொது

1

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீதுய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீஇப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
சொற்பிரிப்பு
அப்பன்நீ, அம்மைநீ, ஐய னும்நீ, அன்புஉடைய மாமனும் மாமி யும்நீ,ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ, ஒருகுலமும் சுற்றமும் ஓர்ஊ ரும்நீ,துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ, துணைஆய்என் நெஞ்சம் துறப்பிப் பாய்நீ,இப்பொன்நீ, இம்மணிநீ, இம்முத் து(ந்)நீ இறைவன்நீ - ஏறுஊர்ந்த செல்வன் நீயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்பகையும் பைய நையும்எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்தசெம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர் செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
சொற்பிரிப்பு
வெம்பவரு கிற்பதுஅன்று, கூற்றம் நம்மேல்; வெய்யவினைப் பகையும் பைய நையும்;எம்பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்; எங்குஎழில்என் ஞாயிறு? எளியோம் அல்லோம்-அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி, அனல்ஆடி, ஆன்அஞ்சும் ஆட்டுஉ கந்தசெம்பவள வண்ணர்,செங் குன்ற வண்ணர், செவ்வான வண்ணர்,என் சிந்தை யாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரேஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரேபாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரேகாட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
சொற்பிரிப்பு
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே? அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே?ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே? உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே?பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே? பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே?காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே? காண்பார்ஆர், கண்ணுதலாய்க்! காட்டாக் காலே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்றசொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மைநிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்றகற்பகமே யானுன்னை விடுவே னல்லேன் கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
சொற்பிரிப்பு
நல்பதத்தார் நல்பதமே! ஞான மூர்த்தி! நலஞ்சுடரே! நால்வேதத்து அப்பால் நின்றசொல்பதத்தார் சொல்பதமும் கடந்து நின்ற சொலற்குஅரிய சூழலாய்! இதுஉன் தன்மை;நிற்பதுஒத்து நிலைஇலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத புலால்உடம்பே புகுந்து நின்றகற்பகமே! யான்உன்னை விடுவேன் அல்லேன்- கனகம்,மா மணி,நிறத்துஎம் கடவு ளானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவி லூரும்பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்விருப்போடு வெண்சங்க மூதா வூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
சொற்பிரிப்பு
திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும், திருவெண்நீறு அணியாத திருஇல் ஊரும்,பருக்குஓடிப் பத்திமையால் பாடா ஊரும், பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும்,விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும், விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்,அருப்போடு மலர்பறித்துஇட்டு உண்ணா ஊரும், அவைஎல்லாம் ஊர்அல்ல; அடவி - காடே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற் தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில் அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
சொற்பிரிப்பு
திருநாமம் அஞ்சுஎழுத்தும் செப்பார் ஆகில், தீவண்ணர் திறம்ஒருகால் பேசார் ஆகில்,ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன்முன் மலர்பறித்துஇட்டு உண்ணார் ஆகில்,அருநோய்கள் கெடவெண்நீறு அணியார் ஆகில், அளிஅற்றார்; பிறந்தஆறு ஏதோ என்னில்,பெருநோய்கள் மிகநலியப், பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில்ஆகி, இறக்கின் றாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய் மறைநான்கு மானாயா றங்க மானாய்பொன்னானாய் மணியானாய் போக மானாய் பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னைஎன்னானாய் என்னானாய் என்னி னல்லால் ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.
சொற்பிரிப்பு
நின்ஆவார் பிறர்இன்றி நீயே ஆனாய்; நினைப்பார்கள் மனத்துக்குஓர் வித்தும் ஆனாய்;மன்ஆனாய்; மன்னவர்க்குஓர் அமுதம் ஆனாய்; மறைநான்கும் ஆனாய்;ஆறு அங்கம் ஆனாய்;பொன்ஆனாய்; மணிஆனாய்; போகம் ஆனாய்; பூமிமேல் புகழ்தக்க பொருளே! உன்னை,“என்ஆனாய்! என்ஆனாய்!” என்னின் அல்லால், ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய் அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்எத்தனையும் அரியைநீ எளியை யானாய் எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றேஇத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.
சொற்பிரிப்பு
அத்தா!உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள்நோக்கில் - தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்;எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்; எனைஆண்டு கொண்டுஇரங்கி ஏன்று கொண்டாய்;பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!இத்தனையும் எம்பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாயநலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்றவிலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன் என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.
சொற்பிரிப்பு
குலம்பொல்லேன்; குணம்பொல்லேன்; குறியும் பொல்லேன்; குற்றமே பெரிதுஉடையேன்; கோலம் ஆயநலம்பொல்லேன்; நான்பொல்லேன்; ஞானி அல்லேன்; நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்றவிலங்குஅல்லேன்; விலங்குஅல்லாது ஒழிந்தேன் அல்லேன்; வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்;இலம்பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; என்செய்வான் தோன்றினேன், ஏழை யேனே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும்மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.
சொற்பிரிப்பு
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான்ஆளத் தருவ ரேனும்,மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம், மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்;அங்கம்எலாம் குறைந்துஅழுகு தொழுநோ யரா(அ)ய் ஆஉரித்துத் தின்றுஉழலும் புலையர் ஏனும்,கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில், அவர்கண்டீர், நாம்வணங்கும் கடவுள் ஆரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.