திருமுறை 6 · 6.093 · 10

பலவகைத்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பொது
நாடு
பொது

1

நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர ஆயிரமா முகத்தி னோடுபாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு படவரவும் பனிமதியும் வைத்த செல்வர்தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர் தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற் பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே.
சொற்பிரிப்பு
நேர்ந்துஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலைதளர ஆயிரம்மா முகத்தி னோடுபாய்ந்துஒருத்தி படர்சடைமேல் பயிலக் கண்டு, படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்-தாம்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்துஒருதண்டு ஊன்றிமெய் தளரா முன்னம்-“பூந்துருத்தி பூந்துருத்தி” என்பீர் ஆகில், பொல்லாப் புலால்-துருத்தி போக்கல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லைமைத்தானக் கண்மடவார் தங்க ளோடு மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும் படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேயநெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில் நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே.
சொற்பிரிப்பு
ஐத்தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்துஅடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை;-மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு மாயம்மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!-பைத்தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர்சடைமேல் வைத்துஉகந்த பண்பன் மேய“நெய்த்தானம் நெய்த்தானம்” என்பீர் ஆகில், நிலாவாப் புலால்-தானம் நீக்கல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பொய்யாறா வாறே புனைந்து பேசிப் புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்கையாறாக் கரண முடையோ மென்று களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்நெய்யாறா ஆடிய நீல கண்டர் நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேயஐயாறே ஐயாறே என்பீ ராகில் அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.
சொற்பிரிப்பு
பொய்ஆறா ஆறே புனைந்து பேசிப், புலர்ந்துஎழுந்த காலைப் பொருளே தேடிக்,“கையாறாக் கரணம் உடையோம்” என்று களித்த மனத்தராய்க், கருதி வாழ்வீர்!நெய்ஆறா ஆடிய நீல கண்டர், நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர், மேய“ஐயாறே ஐயாறே” என்பீர் ஆகில், அல்லல்தீர்ந்து அமருலகம் ஆளல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார் ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார் களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும் அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேயபழனம் பழனமே என்பீ ராகிற் பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.
சொற்பிரிப்பு
இழவுஒன்று தாம்ஒருவர்க்கு இட்டுஒன்று ஈயார்; ஈன்றுஎடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்கழல்நம்கோ வைஆதல் கண்டும், தேறார்; களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்!அழல்நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும், அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய“பழனம் பழனமே” என்பீர் ஆகில், பயின்றுஎழுந்த பழவினைநோய் பாற்றல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம் மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேயசோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற் துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.
சொற்பிரிப்பு
ஊற்றுத் துறைஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க அடைக்கும்போது உணர மாட்டீர்;மாற்றுத் துறைவழிகொண்டு ஓடா முன்னம்,- மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!-வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய“சோற்றுத் துறைசோற்றுத் துறை” என்பீர் ஆகில்,- துயர்நீங்கித் தூநெறிக்கண் சேரல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற் கள்ளக் கடலி லழுந்தி வாளாநலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேய அருமறையோ டாறங்க மானார் கோயில்வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில் வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.
சொற்பிரிப்பு
கலம்சுழிக்கும் கருங்கடல்சூழ் வையம் தன்னில் கள்ளக் கடலில் அழுந்தி, வாளாநலம்சுழியா, எழுநெஞ்சே! இன்பம் வேண்டில், நம்பன்தன் அடிஇணைக்கே நவில்வாய் ஆகில்,அலம்சுழிக்கும் மன்நாகம் தன்னால் மேய, அருமறையோடு ஆறுஅங்கம் ஆனார் கோயில்,“வலஞ்சுழியே வலஞ்சுழியே” என்பீர் ஆகில், வல்வினைகள் தீர்ந்துவான் ஆளல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தண்டி குண்டோ தரன்பிங் கிருடி சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்பண்டை உலகம் படைத்தான் றானும் பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற் கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.
சொற்பிரிப்பு
தண்டி, குண்டோ தரன்,பிங் கிருடி, சார்ந்த புகழ்நந்தி, சங்கு கன்னன்,பண்டை உலகம் படைத்தான் தானும், பாரை அளந்தான், பல்லாண்டு இசைப்பத்,திண்டி வயிற்றுச் சிறுகண் பூதம் சிலபாடச்; செங்கண் விடைஒன்று ஊர்வான்“கண்டியூர் கண்டியூர்” என்பீர் ஆகில், கடுகநும் வல்வினையைக் கழற்றல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே வெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போதுவடமூக்க மாமுனிவர் போலச் சென்று மாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர்படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும் பங்கயத்து மேலயனும் பரவிக் காணாகுடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற் கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.
சொற்பிரிப்பு
விடம்,ஊக்கப் பாம்பேபோல், சிந்தி, நெஞ்சே! வெள்ஏற்றான் தன்தமரைக் கண்ட போதுவடம்ஊக்க மாமுனிவர் போலச் சென்று, மாதவத்தார் மனத்துஉளார், மழுவாள் செல்வர்,படம்மூக்கப் பாம்புஅணையில் பள்ளி யானும் பங்கயத்து மேல்அயனும் பரவிக் காணாக்,“குடமூக்கே குடமூக்கே” என்பீர் ஆகில், கொடுவினைகள் தீர்ந்துஅரனைக் குறுகல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந் தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக் கார்மயிலஞ் சாயலார் கலந்து காணஎண்காட்டாக் காடங் கிடமா நின்று எரிவீசி இரவாடும் இறைவர் மேயவெண்காடே வெண்காடே என்பீ ராகில் வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.
சொற்பிரிப்பு
தண்காட்டாச், சந்தனமும் தவள நீறும்; தழைஅணுகும் குறுங்கொன்றை மாலை சூடிக்;கண்காட்டாக், கருவரைபோல் - அனைய காஞ்சிக் கார்மயில்அம் சாயலார் கலந்து காண;எண்காட்டாக் காடுஅங்கு இடமா நின்று(வ்) எரிவீசி; இரவுஆடும் இறைவர் மேய“வெண்காடே வெண்காடே” என்பீர் ஆகில், வீடாத வல்வினைநோய் வீட்டல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தந்தையார் தாயா ருடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரேவந்தவா றெங்ஙனே போமா றேதோ மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டாசிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின் திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னிஎந்தையார் திருநாமம் நமச்சி வாய என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.
சொற்பிரிப்பு
தந்தைஆர்? தாய்ஆர்? உடன்பி றந்தார், தாரம்,ஆர்? புத்திரர்ஆர்? தாம்தாம் ஆரே?வந்தஆறு எங்ஙனே? போம்ஆறு ஏதோ? மாயம்ஆம்; இதற்குஏதும் மகிழ வேண்டா!சிந்தையீர்! உமக்குஒன்று சொல்லக் கேண்மின்; திகழ்மதியும் வாள்அரவும் திளைக்கும் சென்னிஎந்தையார் திருநாமம் “நமச்சி வாய” என்றுஎழுவார்க்கு இருவிசும்பில் இருக்கல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.