1
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்கா டுடையானை முதலா னானைஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மூஇலைவேல் கையானை, மூர்த்தி தன்னை, முதுபிணக்காடு உடையானை, முதல்ஆ னானை,ஆவினில்ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டுஉகந்த ஐயன் தன்னைப்,பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வுஅரிய பெருமானைப், புனிதன் தன்னைக்,காவலனைக், கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக், கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.