திருமுறை 6 · 6.091 · 10

திருவெறும்பியூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
எறும்பியூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாயதன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத் தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டிஅன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்டதென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
பன்னியசெந் தமிழ்அறியேன்; கவியேன் மாட்டேன்; எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய-தன்னையும்தன் திறத்துஅறியாப் பொறிஇ லேனைத் தன்திறமும் அறிவித்து, நெறியும் காட்டி,அன்னையையும் அத்தனையும் போல, அன்புஆய் அடைந்தேனைத் தொடர்ந்து,என்னை ஆளாக் கொண்டதென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப் பசுபதியைப் பாசுபத வேடத் தானைவிளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை வேதியனை விண்ணவனை மேவி வையம்அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
பளிங்கின்நிழ லுள்பதித்த சோதி யானைப், பசுபதியைப், பாசுபத வேடத் தானை,விளிந்துஎழுந்த சலந்தரனை வீட்டி னானை, வேதியனை, விண்ணவனை, மேவி வையம்அளந்தவனை, நான்முகனை, அல்லல் தீர்க்கும் அருமருந்தை,- ஆம்ஆறு அறிந்துஎன் உள்ளம்தெளிந்து-எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக் கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்உருவையண்டத் தொருமுதலை யோத வேலி உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்றமருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாசத்திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
கருவை;என்தன் மனத்துஇருந்த கருத்தை; ஞானக்- கடுஞ்சுடரைப்; படிந்துகிடந்து அமரர் ஏத்தும்உருவை;அண்டத்து ஒருமுதலை; ஓத வேலி உலகில்நிறை தொழில்இறுதி நடுஆய் நின்ற,மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த, மயானத்து, மாசிலா மணியை; வாசத்திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப் புண்ணியனைப் புவனியது முழுதும் போகஉமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணை உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
பகழிபொழிந்து அடல்அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரைப், பரிந்து தன்னைப்புகழும்அன்பர்க்கு இன்புஅமரும் அமுதைத், தேனைப், புண்ணியனைப், புவனிஅது முழுதும் போதஉமிழும்அம்பொன் குன்றத்தை, முத்தின் தூணை, உமையவள்தம் பெருமானை, இமையோர் ஏத்தும்திகழ்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம் பயில்வானை அயில்வாய சூல மேந்திநேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
பாரிடங்கள் உடன்பாடப் பயின்று நட்டம் பயில்வானை, அயில்வாய சூலம் ஏந்திநேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை, நின்மலனை, அம்மலர்கொண் ட(அ)யனும் மாலும்பார்இடந்தும் மேல்உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை, நிமிர்ந்துமுனி கணங்கள் ஏத்தும்சீர்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர் கரப்பானைக் கடியநடை விடையொன் றேறிஊர்பலவுந் திரிவானை ஊர தாக ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டுபேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
கார்முகில்ஆய்ப் பொழிவானைப், பொழிந்த முன்நீர் கரப்பானைக், கடியநடை விடைஒன்று ஏறிஊர்பலவும் திரிவானை, ஊர்அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டுபேர்எழுத்துஒன்று உடையானைப், பிரம னோடு மாலவனும் இந்திரனும்மந் திரத்தால் ஏத்தும்சீர்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும் அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
“நீள்நிலமும், அம்தீயும், நீரும், மற்றை நெறிஇலங்கும் மிகுகாலும், ஆகா ச(ம்)மும்,வாள்நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும், மன்உயிரும், என்உயிரும், தான்ஆய் செம்பொன்ஆணி!”என்றும், “அஞ்சனமா மலையே!” என்றும், “அம்பவளத் திரள்!”என்றும், அறிந்தோர் ஏத்தும்சேண்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன் பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்புசெறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
அறம்தெரியா, ஊத்தைவாய், அறிவுஇல் சிந்தை ஆரம்பக் குண்டரோடு, அயர்த்து நாளும்மறந்தும்அரன் திருவடிகள் நினைய மாட்டா மதிஇலியேன் வாழ்வுஎல்லாம் வாளா; மண்மேல்பிறந்தநாள் நாள்அல்ல, வாளா; ஈசன் பேர்பிதற்றிச் சீர்அடிமைத் திறத்துஉள் அன்புசெறிந்துஎறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்டகுறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச் சடையானை மடைதோறுங் கமல மென்பூச்செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
அறிவுஇலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி அறியாதார் தம்திறத்துஒன்று அறியா தானைப்,பொறிஇலங்கு வாள்அரவம் புனைந்து பூண்ட புண்ணியனைப், பொருதிரைவாய் நஞ்சம் உண்டகுறிஇலங்கு மிடற்றானை, மடல்-தேன் கொன்றைச் சடையானை, மடைதோறும் கமலம் மென்பூச்செறிஎறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோள்முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாடஇருந்தவனை ஏழுலகு மாக்கி னானை எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்ததிருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
அருந்தவத்தின் பெருவலியால் அறிவது அன்றி, அடல்அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்முரிந்து,நெரிந்து, அழிந்து,பா தாளம் உற்று, முன்கைநரம் பினைஎடுத்துக் கீதம் பாட,இருந்தவனை; ஏழ்உலகும் ஆக்கி னானை; எம்மானைக்; கைம்மாவின் உரிவை போர்த்த,திருந்துஎறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச், செழுஞ்சுடரைச்,- சென்றுஅடையப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.