1
மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னைநாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானைஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
மூஇலைநல் சூலம்வலன் ஏந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை,நாவலனை, நரைவிடைஒன்று ஏறு வானை, நால்வேதம் ஆறுஅங்கம் ஆயி னானை,ஆவினில்ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன்திருமால் ஆனானை, அனலோன் போற்றும்காவலனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.