திருமுறை 6 · 6.089 · 10

திருவின்னம்பர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
இன்னம்பர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும் அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்சொல்லின் அருமறைகள் தாமே போலுந் தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்வில்லிற் புரமூன் றெரித்தார் போலும் வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்எல்லி நடமாட வல்லார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
அல்லிமலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்புஉடையார் சிந்தை அகலார் போலும்;சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலார் போலும்;வில்லின் புரம்மூன்று எரித்தார் போலும்; வீங்குஇருளும் நல்வெளியும் ஆனார் போலும்;எல்லி நடம்ஆட வல்லார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கோழிக் கொடியோன்றன் தாதை போலுங் கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்ஊழி முதல்வருந் தாமே போலும் உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும் அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்ஏழு பிறவிக்குந் தாமே போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
கோழிக் கொடியோன்தன் தாதை போலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்;ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்;ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்;ஏழு பிறவிக்கும் தாமே போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்பண்டிருவர் காணாப் படியார் போலும் பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்கண்ட மிறையே கறுத்தார் போலுங் காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்இண்டைச் சடைசேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
தொண்டர்கள் தம்தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூநெறிஆய் நின்றார் போலும்;பண்டுஇருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள்தம் சித்தத்து இருந்தார் போலும்;கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்;இண்டைச் சடைசேர் முடியார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்ஊனொத்த வேலொன் றுடையார் போலும் ஒளிநீறு பூசு மொருவர் போலுந்தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந் தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர்சடைமேல் வைத்துஉகந்த மைந்தர் போலும்;ஊன்ஒத்த வேல்ஒன்று உடையார் போலும்; ஒளிநீறு பூசும் ஒருவர் போலும்;தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர்பெரியார் இல்லை போலும்;ஏனத்து எயிறுஇலங்கப் பூண்டார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சூழுந் துயர மறுப்பார் போலுந் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும் ஆட லுகந்த அழகர் போலுந்தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு தன்மை யளித்த தலைவர் போலும்ஏழு பிறப்பு மறுப்பார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதிஆய் நின்றார் போலும்;ஆழும் கடல்நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த அழகர் போலும்;தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு, தன்மை அளித்த தலைவர் போலும்;ஏழு பிறப்பும் அறுப்பார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாதத் தணையுஞ் சிலம்பர் போலும் பாரூர் விடையொன் றுடையார் போலும்பூதப் படையாள் புனிதர் போலும் பூம்புகலூர் மேய புராணர் போலும்வேதப் பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவித் திரியுந் தொண்டர்ஏதப் படாவண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார்ஊர் விடைஒன்று உடையார் போலும்;பூதப் படைஆள் புனிதர் போலும்; பூம்புகலூர் மேய புராணர் போலும்;வேதப் பொருள்ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர்ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும் பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்கல்லாதார் காட்சிக் கரியார் போலுங் கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்பொல்லாத பூதப் படையார் போலும் பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்எல்லாரு மேத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
பல்ஆர் தலைஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள்தம் சித்தத்து இருந்தார் போலும்;கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்;பொல்லாத பூதப் படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்;எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மட்டு மலியுஞ் சடையார் போலும் மாதையோர் பாக முடையார் போலுங்கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங் காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்நட்டம் பயின்றாடும் நம்பர் போலும் ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்எட்டுத் திசைகளுந் தாமே போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
மட்டு மலியும் சடையார் போலும்; மாதைஓர் பாகம் உடையார் போலும்;கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்;நட்டம் பயின்றுஆடும் நம்பர் போலும்; ஞாலம்,எரி, நீர்,வெளி,கால், ஆனார் போலும்;எட்டுத் திசைகளும் தாமே போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கருவுற்ற காலத்தே என்னை யாண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்செருவிற் புரமூன்று மட்டார் போலுந் தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்மருவிப் பிரியாத மைந்தர் போலும் மலரடிகள் நாடி வணங்க லுற்றஇருவர்க் கொருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
கருஉற்ற காலத்தே என்னை ஆண்டு கழல்போது தந்து,அளித்த கள்வர் போலும்;செருவில் புரம்மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும் தேவர்ஆம் செல்வர் போலும்;மருவிப் பிரியாத மைந்தர் போலும்; மலர்அடிகள் நாடி வணங்கல் உற்றஇருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அலங்கற் சடைதாழ ஐய மேற்று அரவ மரையார்க்க வல்லார் போலும்வலங்கை மழுவொன் றுடையார் போலும் வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை விறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
சொற்பிரிப்பு
அலங்கல் சடைதாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரைஆர்க்க வல்லார் போலும்;வலங்கை மழுஒன்று உடையார் போலும்; வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்;விலங்கல் எடுத்துஉகந்த வெற்றி யானை விறல்அழித்து மெய்ந்நரம்பால் கீதம் கேட்டு,அன்று,இலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்- இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.