திருமுறை 6 · 6.088 · 10

திருவோமாம்புலியூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஓமாம்புலியூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை எழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னைஊராரும் படநாக மாட்டு வானை உயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
ஆர்ஆரும் மூஇலைவேல் அங்கை யானை; அலைகடல்நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும்ஏர்ஆரும் மதிபொதியும் சடையி னானை; எழுபிறப்பும் எனைஆளா உடையான் தன்னை;ஊர்ஆரும் படநாகம் ஆட்டு வானை; உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்சீர்ஆரும் வடதளிஎம் செல்வன் தன்னைச்;- சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச்சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன் சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானைஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும் உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந்தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
“ஆதியான்” அரிஅயன்,என்று அறிய ஒண்ணா அமரர்தொழும் கழலானை, அமலன் தன்னைச்சோதிமதி கலைதொலையத், தக்கன், எச்சன், சுடர்இரவி அயில்எயிறு, தொலைவித் தானை;ஓதிமிக அந்தணர்கள் எரிமூன்று ஓம்பும் உயர்புகழ்ஆர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்தீதுஇல்திரு வடதளிஎம் செல்வன் தன்னைச்;- சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வருமிக்க மதயானை யுரித்தான் றன்னை வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச் சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல்உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி உத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந்திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
வருமிக்க மதயானை உரித்தான் தன்னை; வானவர்கோன் தோள்அனைத்தும் மடிவித் தானைத்;தருமிக்க குழல்உமையாள் பாகன் தன்னைச்; சங்கரன்எம் பெருமானைத்; தரணி தன்மேல்உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி, உத்தமர்வாழ் தரும்,ஓமாம் புலியூர் மன்னும்திருமிக்க வடதளிஎம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ அழல்விழித்த கண்ணானை அமரர் கோனைவென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னைஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும் உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந்தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
அன்றினவர் புரம்மூன்றும் பொடிஆய் வேவ அழல்விழித்த கண்ணானை; அமரர் கோனை;வென்றிமிகு காலன்உயிர் பொன்றி வீழ விளங்குதிரு வடிஎடுத்த விகிர்தன் தன்னை;ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும், உயர்புகழ்நால் மறை,ஓமாம் புலியூர் நாளும்தென்றல்மலி வடதளிஎம் செல்வன் தன்னைச்;- சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப் பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப்பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார் பாராத வகைபண்ண வல்லான் றன்னைஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர் உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந்தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
பாங்குஉடைய எழில்அங்கி அருச்சனைமுன் விரும்பப் பரிந்துஅவனுக்கு அருள்செய்த பரமன் தன்னைப்;பாங்குஇலா நரகுஅதனில் - தொண்டர் ஆனார் பாராத வகைபண்ண வல்லான் தன்னை;ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர், உயர்புகழ்அந் தணர்ஏத்த, உலகர்க்கு என்றும்தீங்குஇல்,திரு வடதளிஎம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப் பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
அருந்தவத்தோர் தொழுதுஏத்தும் அம்மான் தன்னை;ஆராத இன்னமுதை; அடியார் தம்மேல்வரும்துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள நம்பியை;என் மருந்து தன்னைப்;பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு, துங்கப்பொழில்கெழுவு தரும்,ஓமாம் புலியூர் நாளும்திருந்துதிரு வடதளிஎம் செல்வன் தன்னைச்;-சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மலையானை வருமலையன் றுரிசெய் தானை மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்கலையானைக் கலையாருங் கையி னானைக் கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்உலையாத அந்தணர்கள் வாழு மோமாம் புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்தசிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
மலையானை; வரும்மலைஅன்று உரிசெய் தானை மறையானை; மறையாலும் அறிய ஒண்ணாக்கலையானைக்; கலைஆரும் கையி னானைக்; கடிவானை, அடியார்கள் துயரம் எல்லாம்;உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்- புலியூர்எம் உத்தமனைப்; புரம்மூன்று எய்தசிலையானை; வடதளிஎம் செல்வன் தன்னைச்;- சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச் செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத் தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர் உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
சேர்ந்துஓடும் மணிக்கங்கை சூடி னானைச், செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்,சார்ந்தோர்கட்கு இனியானைத், தன்ஒப்பு இல்லாத் தழல்உருவைத், தலைமகனைத், தகைநால் வேதம்ஓர்ந்துஓதிப் பயில்வார்வாழ் தரும்ஓமாம் புலியூர் உள்ளானைக், கள்ளாத அடியார் நெஞ்சில்சேர்ந்தானை, வடதளிஎம் செல்வன் தன்னைச்;- சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்று மலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும்ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப் பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ்சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
சொற்பிரிப்பு
வார்கெழுவு முலைஉமையாள் வெருவ அன்று மலைஎடுத்த வாள்அரக்கன் தோளும் தாளும்ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து, மீண்டே இன்இசைகேட்டு இருந்தானை, இமையோர் கோனைப்;பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப், பைம்பொழில்சேர் தரும்,ஓமாம் புலியூர் மன்னும்சீர்கெழுவு வடதளிஎம் செல்வன் தன்னைச்;- சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.