1
வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண் வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண் ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண் கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
வானவன்காண்; வானவர்க்கும் மேல்ஆ னான்காண்; வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்ஆனவன்காண்; ஆன்ஐந்தும் ஆடி னான்காண்; ஐயன்காண்; கையில்அனல் ஏந்தி ஆடும்கானவன்காண்; கானவனுக்கு அருள்செய் தான்காண்; கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்தேன்அவன்காண்; சென்றுஅடையாச் செல்வன் தான்காண்; சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.