1
கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த காபா லியைஉருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை உணர்வெலா மானானை ஓசை யாகிவருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேயதிருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
சொற்பிரிப்பு
கருஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக், கமலத்தோன் தலைஅரிந்த காபா லி(ய்)யை,உருஆர்ந்த மலைமகள்ஓர் பாகத் தானை, உணர்வுஎலாம் ஆனானை, ஓசை ஆகிவருவானை, வலஞ்சுழிஎம் பெருமான் தன்னை, மறைக்காடும் ஆவடுதண் துறையும் மேயதிருவானைத், தென்பரம்பைக் குடியில் மேய திருஆலம் பொழிலானைச்;- சிந்தி, நெஞ்சே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.