1
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண் புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங் கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளேசேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
ஆர்த்தான்காண், அழல்நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன்காண்; ஆனைத் தோலைப்போர்த்தான்காண்; புரிசடைமேல் புனல்ஏற் றான்காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான்காண்;காத்தான்காண்,- உலகுஏழும் கலங்கா வண்ணம்- கனைகடல்வாய் நஞ்சுஅதனைக் கண்டத்து உள்ளேசேர்த்தான்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.