1
பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப் பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னிஇருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசிஅருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச் செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
பெருந்தகையைப், பெறற்குஅரிய மாணிக் கத்தைப், பேணிநினைந்து எழுவார்தம் மனத்தே மன்னிஇருந்தமணி விளக்குஅதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசிஅருந்திறல்மா நடம்ஆடும் அம்மான் தன்னை, அங்கனகச் சுடர்க்குன்றை, அன்றுஆ லின்கீழ்த்திருந்துமறைப் பொருள்நால்வர்க்கு அருள்செய் தானைச்,- செங்காட்டங் குடிஅதனில் கண்டேன், நானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.