திருமுறை 6 · 6.083 · 10

திருப்பாசூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பாசூர்
நாடு
தொண்டைநாடு

1

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்றஎண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்றகண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்றபண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
விண்ஆகி, நிலன்ஆகி, விசும்பும் ஆகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்றஎண்ஆகி, எழுத்துஆகி, இயல்பும் ஆகி, ஏழ்உலகும் தொழுதுஏத்திக் காண நின்றகண்ஆகி, மணிஆகிக், காட்சி ஆகிக், காதலித்துஅங்கு அடியார்கள் பரவ நின்றபண்ஆகி, இன்அமுதுஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வேதமோர் நான்காயா றங்க மாகி விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக் குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்காதலால் வானவர்கள் போற்றி யென்று கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்றபாதியோர் மாதினனைப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
வேதம்ஓர் நான்குஆய்,ஆறு அங்கம் ஆகி, விரிக்கின்ற பொருட்குஎல்லாம் வித்தும் ஆகிக்,கூதல்ஆய்ப், பொழிகின்ற மாரி ஆகிக், குவலயங்கள் முழுதும்ஆய்க், கொண்டல் ஆகிக்,காதலால் வானவர்கள், “போற்றி” என்று கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்றபாதிஓர் மாதினனைப்; பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த் தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக் காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக் கூத்தாட வல்ல குழக னாகிப்படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
தடவரைகள் ஏழும்ஆய்க், காற்றுஆய்த், தீஆய்த், தண்விசும்புஆய்த், தண்விசும்பின் உச்சி ஆகிக்,கடல்வலயம் சூழ்ந்ததுஒரு ஞாலம் ஆகிக், காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகிக்,குடமுழவச் சதிவழியே அனல்கை ஏந்திக், கூத்துஆட வல்ல குழகன் ஆகிப்,படஅரவுஒன்று அதுஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை நிறைமதிய முடன்சூடி நீதி யாலேசீராரும் மறையோதி உலக முய்யச் செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்டகாராருங் கண்டனைக் கச்சி மேய கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
நீர்ஆரும் செஞ்சடைமேல் அரவம் கொன்றை நிறைமதியம் உடன்சூடி, நீதி யாலேசீர்ஆரும் மறைஓதி, உலகம் உய்யச் செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்சம் உண்டகார்ஆரும் கண்டனைக்; கச்சி மேய கண்ணுதலைக்; கடல்ஒற்றி கருதி னானைப்;பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான் விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக் கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல்ஆடினார் பெருங்கூத்துக் காளி காண அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டுபாடினார் நால்வேதம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான், வில்பிடித்துக், கொம்புஉடைய ஏனத் தின்பின்,கூடினார் - உமைஅவளும் கோலம் கொள்ளக், கொலைப்பகழி உடன்கோத்துக் - கோரப் பூசல்;ஆடினார், பெருங்கூத்துக் காளி காண; அருமறையோடு ஆறுஅங்கம் ஆய்ந்து கொண்டு,பாடினார், நால்வேதம்; பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற் பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்தசித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்கவித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
புத்தியினால் சிலந்தியும்தன் வாயின் நூலால் புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்தசித்தியினால், அரசுஆண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார்; திறலால் மிக்கவித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு,அதற்கு வீடு காட்டிப்,பத்தர்களுக்கு இன்அமுதுஆம் பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார் இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர் அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித் தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்தபணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
இணைஒருவர் தாம்அல்லால் யாரும் இல்லார்; இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்;அணைவுஅரியர், யாவர்க்கும்; ஆதி தேவர்; அருமந்த நன்மைஎலாம் அடியார்க்கு ஈவர்;தணல்முழுகு பொடிஆடும் செக்கர் மேனித் தத்துவனைச், சாந்துஅகிலின் அளறு தோய்ந்தபணைமுலையாள் பாகனை,எம் பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றி அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றைக் கண்டும் இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
அண்டவர்கள் கடல்கடைய, அதனுள் - தோன்றி, அதிர்ந்துஎழுந்த ஆலாலம் வேலை ஞாலம்எண்திசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு, இமைப்புஅளவில் உண்டுஇருண்ட கண்டர்; தொண்டர்வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று, வானவர்கள் தானவர்கள் வணங்கி, ஏத்தும்பண்டரங்க வேடனை;எம் பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை நான்முகனு மறியாத நெறியான் கையிற்சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத் தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்காலத்தா லுதைசெய்து காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
ஞாலத்தை உண்டதிரு மாலும், மற்றை நான்முகனும், அறியாத நெறியார்; கையில்சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத், தொல்உலகில் பல்உயிரைக் கொல்லும் கூற்றைக்கால(த்)தால் உதைசெய்து, காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்;பால்ஒத்த வெண்நீற்றர்; பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான் மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோடிச்சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றிஏந்துதிரள் திண்டோ ளுந் தலைகள் பத்தும் இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்டபாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
வேந்தன்,நெடு முடிஉடைய அரக்கர் கோமான், மெல்லியலாள் உமைவெருவ, விரைந்திட்டு ஓடிச்,சாந்தம்என நீறுஅணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளால் எடுத்திடலும், தாளால் ஊன்றிஏந்துதிரள் திண்தோளும் தலைகள் பத்தும் இறுத்து,அவன்தன் இசைகேட்டு, இரக்கம் கொண்ட,பாந்தள்அணி சடைமுடிஎம் பாசூர் மேய பரஞ்சுடரைக்;- கண்டுஅடியேன் உய்ந்த ஆறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.