திருமுறை 6 · 6.082 · 10

திருச்சாய்க்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
சாய்க்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வானத் திளமதியும் பாம்புந் தம்மில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந் தில்லை நடமாடுந் தேவர் போலும்ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும் நன்மையுந் தீமையு மானார் போலுந்தேனொத் தடியார்க் கினியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
வானத்து இளமதியும் பாம்பும் தம்மில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;தேனைத் திளைத்துஉண்டு வண்டு பாடும் தில்லை நடம்ஆடும் தேவர் போலும்;ஞானத்தின் ஒண்சுடர்ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்;தேன்ஒத்து அடியார்க்கு இனியார் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும் வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்அண்ணா மலையுறையும் அண்ணல் போலும் அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்பண்ணார் களிவண்டு பாடி யாடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலுந்திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
விண்ணோர் பரவநஞ்சு உண்டார் போலும்; வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்;அண்ணா மலைஉறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்;பண்ஆர் களிவண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும்-திண்ஆர் புகார்முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கானிரிய வேழ முரித்தார் போலுங் காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும் வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும் உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந்தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
கான்இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப்பூம் பட்டினத்து உள்ளார் போலும்;வான்இரிய வருபுரம்மூன்று எரித்தார் போலும்; வடகயிலை மலைஅதுதம் இருக்கை போலும்;ஊன்இரியத் தலைகலனா உடையார் போலும்; உயர்தோணி புரத்துஉறையும் ஒருவர் போலும்-தேன்இரிய மீன்பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும் ஊழி பலகண் டிருந்தார் போலும்மானுற்ற கரதலமொன் றுடையார் போலும் மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங்கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந்தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
ஊன்உற்ற வெண்தலைசேர் கையர் போலும்; ஊழி பலகண்டு இருந்தார் போலும்;மான்உற்ற கரதலம்ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்;கான்உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண்அழலால் காய்ந்தார் போலும்-தேன்உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங் காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்பார்மல்கி யேத்தப் படுவார் போலும் பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ்சீர்மல்கு பாட லுகந்தார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
கார்மல்கு கொன்றைஅம் தாரார் போலும்; காலனையும் ஓர்உதையால் கண்டார் போலும்;பார்மல்கி ஏத்தப் படுவார் போலும்; பருப்பதத்தே பல்ஊழி நின்றார் போலும்;ஊர்மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்;சீர்மல்கு பாடல் உகந்தார் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்ய மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூ ருடையார் போலுங்கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலுந்தேவாதி தேவர்க் கரியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
மாவாய்ப் பிளந்துஉகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்;மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்ற மூதூர் உடையார் போலும்;கோஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரைகழலால், அன்று, குமைத்தார் போலும்;தேவாதி தேவர்க்கு அரியார் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங் காரோணத் தென்று மிருப்பார் போலும்இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்படியொருவ ரில்லாப் படியார் போலும் பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ்செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
கடுவெளியோடு ஓர்ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்;இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்; ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;படிஒருவர் இல்லாப் படியார் போலும்; பாண்டிக் கொடுமுடியும் தம்ஊர் போலும்;செடிபடுநோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும் வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்மலையினார் மங்கை மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந்தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ் சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ்சிலையினார் செங்க ணரவர் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
விலைஇலா ஆரம்சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்குஅணிந்த விகிர்தர் போலும்;மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்;தொலைவுஇலார் புரம்மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத் துறை,துருத்தி உள்ளார் போலும்;சிலையின்ஆர் செங்கண் அரவர் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அல்ல லடியார்க் கறுப்பார் போலும் அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும்நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும்முல்லை முகைநகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலுந்தில்லை நடமாடுந் தேவர் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம்அடைந்தார்க்கு ஆட்சி போலும்;நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்;முல்லை முகைநகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்;தில்லை நடம்ஆடும் தேவர் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால் ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்சநிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும் நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும் பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ்சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
உறைப்புஉடைய இராவணன்பொன் மலையைக் கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச,நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும் நிலம்சேர, விரல்வைத்த நிமலர் போலும்;பிறைப்பிளவு சடைக்குஅணிந்த பெம்மான் போலும்; பெண்ஆண் உருவாகி நின்றார் போலும்;சிறப்புஉடைய அடியார்கட்கு இனியார் போலும்- திருச்சாய்க்காட்டு இனிதுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.