திருமுறை 6 · 6.080 · 10

திருமாற்பேறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
மாற்பேறு
நாடு
தொண்டைநாடு

1

பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைஆராத இன்னமுதை அடியார் தங்கட் கனைத்துலகு மானானை அமரர் கோனைக்காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக் கருதுவார் மனத்தானைக் காலற் செற்றசீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
பாரானைப்; பாரினது பயன்ஆ னானைப்; படைப்புஆகிப் பல்உயிர்க்கும் பரிவோன் தன்னை;ஆராத இன்னமுதை,- அடியார் தங்கட்கு,- அனைத்துஉலகும் ஆனானை; அமரர் கோனைக்;கார்ஆரும் கண்டனைக்; கயிலை வேந்தைக்; கருதுவார் மனத்தானைக்; காலற் செற்றசீரானைச்; செல்வனைத்; திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விளைக்கின்ற நீராகி வித்து மாகி விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித் தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
விளைக்கின்ற நீர்ஆகி, வித்தும் ஆகி, விண்ணோடு மண்ஆகி, விளங்கு செம்பொன்துளைக்கின்ற துளைஆகிச், சோதி ஆகித், தூண்ட(அ)ரிய சுடர்ஆகித், துளக்குஇல் வான்மேல்முளைக்கின்ற கதிர்மதியும் அரவும் ஒன்றி முழங்குஒலிநீர்க் கங்கையொடு மூவாது என்றும்திளைக்கின்ற சடையானைத்; திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக் காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றைவிலைபெரிய வெண்ணீற்று மேனி யானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
மலைமகள்தம் கோன்அவனை, மாநீர் முத்தை, மரகதத்தை, மாமணியை, மல்கு செல்வக்கலைநிலவு கையானைக், கம்பன் தன்னைக், காண்புஇனிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை,விலைபெரிய வெண்நீற்று மேனி யானை, மெய்அடியார் வேண்டுவதே வேண்டு வானைச்,சிலைநிலவு கரத்தானைத், திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப் பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னேகற்றானைக் கற்பனவுந் தானே யாய கச்சியே கம்பனைக் காலன் வீழச்செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
உற்றானை, உடல்தனக்குஓர் உயிர்ஆ னானை, ஓங்காரத்து ஒருவனை,அங்கு உமைஓர் பாகம்பெற்றானைப், பிஞ்ஞகனைப், பிறவா தானைப், பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னேகற்றானைக், கற்பனவும் தானே ஆய கச்சிஏ கம்பனைக், காலன் வீழச்செற்றானைத், திகழ்ஒளியைத், திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி நினைவாகி நினைவினிய மலையான் மங்கைகூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக் குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்ஆறாத ஆனந்தத் தடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
நீறுஆகி, நீறுஉமிழும் நெருப்பும் ஆகி, நினைவுஆகி, நினைவுஇனிய மலையான் மங்கைகூறுஆகிக், கூற்றுஆகிக், கோளும் ஆகிக், குணம்ஆகிக், குறையாத உவகைக் கண்ணீர்ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்துஅருளி, அவர்மேல் என்றும்சீறாத பெருமானைத்; திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னைஉருநிலவு மொண்சுடரை உம்ப ரானை உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்கருநிலவு கண்டனைக் காளத் தியைக் கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
மருவுஇனிய மறைப்பொருளை, மறைக்காட் டானை, மறப்புஇலியை, மதிஏந்து சடையான் தன்னை,உருநிலவும் ஒண்சுடரை, உம்ப ரானை, உரைப்புஇனிய தவத்தானை, உலகின் வித்தைக்,கருநிலவு கண்டனைக், காளத் தி(ய்)யைக், கருதுவார் மனத்தானைக், கல்வி தன்னைச்,செருநிலவு படையானைத், திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண்ணா ணாயநிறத்தானை நின்மலனை நினையா தாரை நினையானை நினைவோரை நினைவோன் றன்னைஅறத்தானை அறவோனை ஐயன் றன்னை அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
பிறப்பானைப், பிறவாத பெருமை யானைப், பெரியானை, அரியானைப், பெண்ஆண் ஆயநிறத்தானை, நின்மலனை, நினையா தாரை நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை,அறத்தானை, அறவோனை, ஐயன் தன்னை, அண்ணல்தனை, நண்ண(அ)ரிய அமரர் ஏத்தும்திறத்தானைத், திகழ்ஒளியைத், திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னைஊனகத்தில் உறுதுணையை உலவா தானை ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக் கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
வானகத்தில் வளர்முகிலை, மதியம் தன்னை, வணங்குவார் மனத்தானை, வடிவுஆர் பொன்னை,ஊன்அகத்தில் உறுதுணையை, உலவா தானை, ஒற்றியூர் உத்தமனை, ஊழிக் கன்றைக்,கானகத்துக் கருங்களிற்றைக், காளத் தி(ய்)யைக், கருதுவார் கருத்தானைக், கருவை, மூலத்தேன்அகத்தில் இன்சுவையைத், திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப் பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய் ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
முற்றாத முழுமுதலை; முளையை; மொட்டை; முழுமலரின் மூர்த்தியை; முனியாது என்றும்பற்றுஆகிப் பல்உயிர்க்கும் பரிவோன் தன்னைப்; பராபரனைப்; பரஞ்சுடரைப்; பரிவோர் நெஞ்சில்உற்றானை; உயர்கருப்புச் சிலையோன் நீறுஆய் ஒள்அழல்வாய் வேவஉறும் நோக்கத் தானைச்;செற்றானைத், திரிபுரங்கள்; திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விரித்தானை நான்மறையோ டங்க மாறும் வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றிநெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கைதரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.
சொற்பிரிப்பு
விரித்தானை, நால்மறையோடு அங்கம் ஆறும்; வெற்புஎடுத்த இராவணனை விரலால் ஊன்றிநெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கைதரித்தானைச்; சங்கரனைச்; சம்பு தன்னைத்; தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச்சிரித்தானைத்; திகழொளியைத்; திருமாற் பேற்றுஎம் செம்பவளக் குன்றினைச்;-சென்று அடைந்தேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.