1
தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னைஅண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னைமுண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்றதண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.
சொற்பிரிப்பு
தொண்டர்க்குத் தூநெறிஆய் நின்றான் தன்னைச், சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை,அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பா லானை, ஆதிரைநாள் ஆதரித்த அம்மான் தன்னை,முண்டத்தின் முளைத்துஎழுந்த தீஆ னானை, மூஉருவத்து ஓர்உருஆய் முதல்ஆய் நின்றதண்டத்தில் - தலையாலங் காடன் தன்னைச்,- சாராதே சாலநாள் போக்கி னேனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.