திருமுறை 6 · 6.078 · 10

திருவாலங்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆலங்காடு
நாடு
தொண்டைநாடு

1

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமேநின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமேகொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை யுடையார் தாமேசென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
ஒன்றா உலகுஅனைத்தும் ஆனார் தாமே; ஊழிதோறு ஊழி உயர்ந்தார் தாமே;நின்றுஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,வளி,தீ, ஆகாசம், ஆனார் தாமே;கொன்றுஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே;சென்றுஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே வானோர் வணங்கப் படுவார் தாமேசலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமேபலபலவும் வேடங்க ளானார் தாமே பழனை பதியா வுடையார் தாமேசிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப் படுவார் தாமே;சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; சரண்என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே;பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;சிலைமலையா மூஎயிலும் அட்டார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே அளவில் பெருமை யுடையார் தாமேபூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனிதப் பொருளாகி நின்றார் தாமேபாவுற்ற பாட லுகப்பார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதேவுற் றடிபரவ நின்றார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
ஆஉற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவுஇல் பெருமை உடையார் தாமே;பூஉற்ற நாற்றம்ஆய் நின்றார் தாமே; புனிதப் பொருள்ஆகி நின்றார் தாமே;பாஉற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;தேஉற்று அடிபரவ நின்றார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நாறுபூங் கொன்றை முடியார் தாமே நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமேமாறிலா மேனி யுடையார் தாமே மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமேபாறினார் வெண்டலையி லுண்டார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதேறினார் சித்தத் திருந்தார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
நாறுபூங் கொன்றை முடியார் தாமே; நான்மறையோடு ஆறுஅங்கம் சொன்னார் தாமே;மாறுஇலா மேனி உடையார் தாமே; மாமதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;தேறினார் சித்தத்து இருந்தார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியுஞ் சந்தியு மானார் தாமேசொல்லும் பொருளெலா மானார் தாமே தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமேபல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே பழனை பதியா வுடையார் தாமேசெல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
அல்லும் பகலும்ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே;சொல்லும் பொருள்எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;பல்உரைக்கும் பாஎலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே தூநீ றணியுஞ் சுவண்டர் தாமேதண்டா மரையானும் மாலுந் தேடத் தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமேபண்டா னிசைபாட நின்றார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதிண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
தொண்டுஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே; தூநீறு அணியும் சுவண்டர் தாமே;தண்தா மரையானும் மாலும் தேடத், தழல்உருஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே;பண்தான் இசைபாட நின்றார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மையாருங் கண்ட மிடற்றார் தாமே மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமேஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும் அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமேபையா டரவ மசைத்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமேசெய்யாள் வழிபட நின்றார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
மைஆரும் கண்டம் - மிடற்றார் தாமே; மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே;ஐயாறும் ஆரூரும், ஆனைக் காவும், அம்பலமும், கோயிலாக் கொண்டார் தாமே;பைஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;செய்யாள் வழிபட நின்றார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமேகண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே காலங்க ளூழி கடந்தார் தாமேபண்ணியலும் பாட லுகப்பார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதிண்மழுவா ளேந்து கரத்தார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
விண்முழுதும் மண்முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;கண்விழியால் காமனையும் காய்ந்தார் தாமே; காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;பண்இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே கயிலை மலையை யுடையார் தாமேஊரா வேகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமேபாரார் புகழப் படுவார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
கார்ஆர் கடல்நஞ்சை உண்டார் தாமே; கயிலை மலையை உடையார் தாமே;ஊர்ஆக ஏகம்பம் உகந்தார் தாமே; ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே;பாரார் புகழப் படுவார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே வண்கயிலை மாமலையை வந்தி யாதநீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை நெரிய விரலா லடர்த்தார் தாமேபாலொத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமேசீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
சொற்பிரிப்பு
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே; வண்கயிலை மாமலையை வந்தி யாத,நீலக் கடல்சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே;பால்ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே- திருஆலங் காடுஉறையும் செல்வர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.