திருமுறை 6 · 6.077 · 10

திருவாய்மூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
வாய்மூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்கோட லரவார் சடையிற் கண்டேன் கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்வாடல் தலையொன்று கையிற் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர்கணம் கண்டேன்; மொய்த்த பூதம்ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை அனல்கண்டேன்; கங்கை யாளைக்கோடல், அரவு,ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ்கண்டேன்; கொன்றை கண்டேன்;வாடல் - தலைஒன்று கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன்நீல நிறமுண்ட கண்டங் கண்டேன் நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்காலைக் கதிர்செய் மதியங் கண்டேன் கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்மாலைச் சடையும் முடியுங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பாலின் மொழியாள்ஓர் பாகம் கண்டேன்; பதினெண் கணமும் பயிலக் கண்டேன்;நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி - நுதல்கண்டேன்; பெற்றம் கண்டேன்;காலைக் கதிர்செய் மதியம் கண்டேன்; கரந்தை திருமுடிமேல் - தோன்றக் கண்டேன்;மாலைச் சடையும் முடியும் கண்டேன்; வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மண்ணைத் திகழ நடம தாடும் வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன் வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன் நாலு மறையங்க மோதக் கண்டேன்வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
மண்ணைத் திகழ நடம்அது ஆடும், வரைசிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்;விண்ணில் - திகழும் முடியும் கண்டேன்; வேடம் பலஆம் சரிதை கண்டேன்;நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலு மறைஅங்கம் ஓதக் கண்டேன்;வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விளைத்த பெரும்பத்தி கூர நின்று மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்இளைக்குங் கதநாக மேனி கண்டேன் என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன் சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்றுவளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
விளைத்த பெரும்பத்தி கூர, நின்று மெய்அடியார் தம்மை விரும்பக் கண்டேன்;இளைக்கும் கதநாகம் மேனி கண்டேன்; என்பின் கலம்திகழ்ந்து தோன்றக் கண்டேன்;திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண்ஆர் மதில்மூன்றும் பொன்ற, அன்று,வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன் காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்நான்மறை யானோடு நெடிய மாலும் நண்ணி வரக்கண்டேன் திண்ண மாகமான்மறி தங்கையின் மருவக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
கான்மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்; காலில் கழல்கண்டேன்; கரியின் தோல்கொண்டுஊன்மறையப் போர்த்த வடிவும் கண்டேன்; உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்;நான்மறை யானோடு நெடிய மாலும் நண்ணி வரக்கண்டேன்; திண்ணம் ஆகமான்மறிதம் கையின் மருவக் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்முடியார் சடைமேல் அரவ மூழ்க மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன் கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
அடிஆர் சிலம்புஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்; அவ்அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்;முடிஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்;கொடி,ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்; கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்;வடிஆரும் மூஇலைவேல் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்இழையார் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
குழைஆர் திருத்தோடு காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்;இழைஆர் புரிநூல் வலத்தே கண்டேன்; ஏழ்இசையாழ், வீணை, முரலக் கண்டேன்;தழைஆர் சடைகண்டேன்; தன்மை கண்டேன்; தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்;மழைஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன் பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்; போற்றுஇசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்;பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்; பார்ஆகிப் புனல்ஆகி நிற்கை கண்டேன்;விருந்துஆய்ப் பரந்த தொகுதி கண்டேன்; மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்;மருந்துஆய்ப் பிணிதீர்க்கும் ஆறு கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்கையம் பரணெரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்ஐயம் பலவூர் திரியக் கண்டேன் அன்றவன் றன்வேள்வி அழித்து கந்துவையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
மெய்அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்; வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்;கைஅம்பு அரண்எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும் அங்கைக் கனலும், கண்டேன்;ஐயம் பலஊர் திரியக் கண்டேன்; அன்றவன்தன் வேள்வி அழித்துஉ கந்து,வையம் பரவ இருத்தல் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கலங்க இருவர்க் கழலாய் நீண்ட காரணமுங் கண்டேன் கருவாய் நின்றுபலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன் பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
கலங்க இருவர்க்கு அழல்ஆய் நீண்ட காரணமும் கண்டேன்; கருவாய் நின்று,பலங்கள் தரித்து,உகந்த பண்பும் கண்டேன்; பாடல் ஒலிஎலாம் கூடக் கண்டேன்;இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து,அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்;வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்- வாய்மூர் அடிகளைநான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.