திருமுறை 6 · 6.075 · 11

திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
குடந்தைக் கீழ்க்கோட்டம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும் மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
சொல்மலிந்த மறைநான்குஆறு அங்கம் ஆகிச் சொல்பொருளும் கடந்தசுடர்ச் சோதி போலும்;கல்மலிந்த கயிலைமலை வாணர் போலும்; கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர் போலும்;மல்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்; மலைஅரையன் மடப்பாவை மணாளர் போலும்;கொன்மலிந்த மூவிலைவேல் குழகர் போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன் கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்ஆனலிளங் கடுவிடையொன் றேறி அண்டத் தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற் செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
கான்நல்இளம் கலிமறவன் ஆகிப், பார்த்தன் கருத்துஅளவு செருத்தொகுதி கண்டார் போலும்;ஆன்நல்இளங் கடுவிடைஒன்று ஏறி, அண்டத்து அப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்-தேன்நல்இளங் துவலைமலி தென்றல் முன்றில் செழும்பொழில்பூம் பாளைவிரி தேறல் நாறும்,கூனல்இளம் பிறைதடவு கொடிகொள், மாடக் குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும் நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கைஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும் அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும் ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
நீறுஅலைத்த திருஉருவும், நெற்றிக் கண்ணும், நிலாஅலைத்த பாம்பினொடு, நிறைநீர்க் கங்கைஆறுஅலைத்த சடைமுடியும், அம்பொன் தாளும், அடியவர்க்குக் காட்டிஅருள் புரிவார் போலும்;ஏறுஅலைத்த நிமிர்கொடிஒன்று உடையார் போலும்; ஏழ்உலகும் தொழுகழல்எம் ஈசர் போலும்;கூறுஅலைத்த மலைமடந்தை கொழுநர் போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ் சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலும்; சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலும்;செக்கர்ஒளி, பவளஒளி, மின்னின் சோதி, செழுஞ்சுடர்த்தீ, ஞாயிறு,எனச் செய்யர் போலும்-மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகுபுகைபோய் விண்பொழியக், கழனி எல்லாம்கொக்குஇனிய கனிசிதறித் தேறல் பாயும் குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங் காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும் ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன் நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
காலன்வலி தொலைத்தகழல் காலர் போலும்; காமன்எழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்;ஆல்அதனில் அறம்நால்வர்க்கு அளித்தார் போலும்; ஆணொடுபெண் அலிஅல்லர், ஆனார் போலும்;நீலஉரு, வயிரநிரைப், பச்சை, செம்பொன், நெடும்பளிங்கு,என்று அறிவரிய நிறத்தார் போலும்-கோலமணி கொழித்துஇழியும் பொன்னி நன்நீர்க் குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும் முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
முடிகொண்ட வளர்மதியும், மூன்றாய்த் தோன்றும்- முளைஞாயிறு அன்ன-மலர்க் கண்கள் மூன்றும்,அடிகொண்ட சிலம்பொலியும், அருள்ஆர் சோதி அணிமுறுவல் செவ்வாயும், அழகாய்த் தோன்றத்;துடிகொண்ட இடைமடவாள் பாகம் கொண்டு, சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோல், இந்நாள்குடிகொண்டுஎன் மனத்துஅகத்தே புகுந்தார் போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக் கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ் சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம் பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
கார்இலங்கு திருஉருவத் தவற்கும், மற்றைக் கமலத்தில் காரணற்கும், காட்சி ஒண்ணாச்சீர்இலங்கு தழல்பிழம்பில் சிவந்தார் போலும்; சிலைவளைவித்து அவுணர்புரம் சிதைத்தார் போலும்;பார்,இலங்கு புனல்,அனல்,கால், பரமா காசம், பரிதி,மதி, சுருதியுமாய்ப், பரந்தார் போலும்;கூர்இலங்கு வேல்குமரன் தாதை போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார் புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்குமாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார் மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்லதீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூர் உள்ளார்; புறம்பயத்தார்; அறம்புரிபூந் துருத்தி புக்கு,மாச்சூழ்ந்த பழனத்தார்; நெய்த்தா னத்தார்; மாதவத்து வளர்சோற்றுத் துறையார்; நல்லதீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக்கு ஈந்து, திருவானைக் காவில்ஓர் சிலந்திக்கு அந்நாள்கோச்சோழர் குலத்துஅரசு கொடுத்தார் போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற் பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச் சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதேகொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
பொங்குஅரவர்; புலித்தோலர்; புராணர்; மார்பில் பொறிகிளர்வெண் பூணநூல் புனிதர் போலும்;சங்குஅரவக் கடல்முகடு தட்ட விட்டுச், சதுரநடம் ஆட்டுஉகந்த சைவர் போலும்;அங்குஅரவத் திருவடிக்குஆட் பிழைப்பத், தந்தை அந்தணனை அறஎறிந்தார்க்கு, அருள்அப் போதேகொங்குஅரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கேகூவிஅம ருலகனைத்து முருவிப் போகக் குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
ஏவி,இடர்க் கடல்இடைப்பட்டு இளைக்கின் றேனை இப்பிறவி அறுத்துஏற வாங்கி, ஆங்கேகூவி,அம ருலகுஅனைத்தும் உருவிப் போகக், குறியில்அறு குணத்துஆண்டு கொண்டார் போலும்-தாவி-முதல் காவிரி,நல் யமுனை, கங்கை, சரசுவதி,பொற் றாமரைப்புட் கரணி, தெண்நீர்க்கோவியொடு, குமரி-வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித் தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்நெறிகொண்ட குழலியுமை பாக மாக நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும் மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங் குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
சொற்பிரிப்பு
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித் தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்;நெறிகொண்ட குழலிஉமை பாகம் ஆக, நிறைந்துஅமரர் கணம்வணங்க நின்றார் போலும்;மறிகொண்ட கரதலத்துஎம் மைந்தர் போலும்; மதில்இலங்கைக் கோன்மலங்க, வரைக்கீழ் இட்டுக்,குறிகொண்ட இன்னிசைகேட்டு, உகந்தார் போலும்- குடந்தைக்கீழ்க் கோட்டத்துஎம் கூத்த னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.