1
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
சொற்பிரிப்பு
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்; கல்லால் நிழல்கீழ் இருந்தான் கண்டாய்;பருமணிமா நாகம் பூண்டான் கண்டாய்; பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்; மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய்-குருமணிபோல் அழகுஅமரும் கொட்டை யூரில் கோடீச் சுரத்துஉறையும் கோமான் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.