1
அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்தொலையாத வென்றியார் நின்றி யூரும் நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டுஇலையார் படைகையி லேந்தி யெங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்தமலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.
சொற்பிரிப்பு
அலைஆர் புனல்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்தொலையாத வென்றியார், நின்றி யூரும் நெடுங்களமும் மேவி, விடையை மேற்கொண்டு,இலைஆர் படைகையில் ஏந்தி, எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த,மலைஆர் திரள்அருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு,இடமா மன்னி னாரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.