திருமுறை 6 · 6.071 · 11

திருஅடைவு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பொது
நாடு
பொது

1

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார் கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம் பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.
சொற்பிரிப்பு
பொருப்பள்ளி- வரைவில்லாப் புரம்மூன்று எய்து புலந்துஅழியச் சலந்தரனைப் பிளந்தான்- பொன்சக்-கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ஆர் கமழ்கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல்சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி செழுநனி பள்ளி தவப்பள்ளி சீர்ஆர்பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிதுஆகப் பாலிப் பாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங் கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகைமேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம் வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங் கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறிநாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால் நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.
சொற்பிரிப்பு
காவிரியின் கரைக்கண்டி வீரட் டானம் கடவூர்வீ ரட்டானம் காமருசீர் அதிகைமேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம் வியன்பறியல் வீரட்டம் விடைஊர்திக்கு இடம்ஆம்கோவல்நகர் வீரட்டம் குறுக்கைவீ ரட்டம் கோத்திட்டைக் குடிவீரட் டானம்இவை கூறிநாவில்நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால் நமன்தமரும் “சிவன்தமர்!”என்று அகல்வர் நன்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங் குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடிகற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடிபுற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே.
சொற்பிரிப்பு
நற்கொடிமேல் விடைஉயர்த்த நம்பன் செம்பங்- குடிநல்லக் குடிநளி நாட்டியத் தான்குடிகற்குடிதென் களக்குடி செங்காட் டங்குடி கருந்திட்டைக் குடிகடையக் குடி-கா ணுங்கால்-விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடிபுற்குடிமா குடிதேவன் குடிநீ லக்குடி புதுக்குடியும் போற்றஇடர் போகும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர் பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும் நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும் அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்துறையூருந் துவையூருந் தோழூர் தானுந் துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.
சொற்பிரிப்பு
பிறைஊரும் சடைமுடிஎம் பெருமான் ஆரூர் பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும் நாலூரும் சேற்றூரும் நாரை யூரும்உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும் அளப்பூர்ஓ மாம்புலியூர் ஒற்றி யூரும்துறையூரும் துவையூரும் தோழுர் தானும் துடையூரும் தொழஇடர்கள் தொடரா அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.
சொற்பிரிப்பு
பெருக்குஆறு சடைக்குஅணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழல் கோயில் கருப்பறியல் பொருப்புஅனைய கொகுடிக் கோயில்இருக்குஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்-திருக்கோயில் - சிவன்உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்துஇறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும் மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடுதலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண் சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடுபலர்பாடும் பழையனூர் ஆலங் காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்கவிலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை வெண்காடும் அடையவினை வேறா மன்றே.
சொற்பிரிப்பு
மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில்சூழ் தலைச்சங் காடு;தலைஆலங் காடு;தடங் கடல்சூழ் அம்தண் சாய்க்காடு தள்ளுபுனல் கொள்ளிக் காடுபலர்பாடும் பழையனூர் ஆலங் காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்கவிலைஆடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை வெண்காடும் அடையவினை வேறுஆம் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடுகுடவாயில் குணவாயி லான வெல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
சொற்பிரிப்பு
கடுவாயர் தமைநீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலான் நண்ணும்இடம் அண்ணல் வாயில்நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்மடுஆர்தென் மதுரைநகர் ஆல வாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடுகுடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச் சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கானகோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங் குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம் அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.
சொற்பிரிப்பு
நாடகம்ஆ டி(இ)டம்நந்தி கேச்சுரம்மா காளேச்- சுரம்நாகேச் சுரம்நாகளேச் சுரம்நன்கு ஆனகோடீச்சுரம் கொண்டீச் சுரம்திண் டீச்சுரம் குக்குடேச் சுரம்அக்கீச் சுரம்-கூ றுங்கால்-ஆடகேச் சுரம்அகத்தீச் சுரம்அய னீச்சுரம் அத்தீச் சுரம்சித்தீச் சுரம்அம் தண்கானல்ஈடுதிரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன்உறை சுரம்பலவும் இயம்பு வோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கந்தமா தனங்கயிலை மலை கேதாரங் காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணாமந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம் மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்விந்தமா மலைவேதஞ் சைய மிக்க வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.
சொற்பிரிப்பு
கந்தமா தனம்கயிலை மலைகே தாரம் காளத்தி கழுக்குன்றம் கண்ஆர் அண்ணாமந்தம்ஆம் பொழில்சாரல் வடபர்ப் பதம் மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்விந்தமா மலைவேதம் சையம் மிக்க வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்இந்துசே கரன்உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர்கெடநின்று ஏத்து வோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல் இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகாகள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங் குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே.
சொற்பிரிப்பு
நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு நலம்திகழும் நாலாறும் திருஐ யாறும்தெள்ளாறும் வளைகுளமும் தளிக்கு ளமும்நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக் களம்விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன்கோ டி(க்)காகள்ஆர்ந்த கொன்றையான் நின்ற - ஆறும் குளம்களம்கா என-அனைத்தும் கூறு வோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடுமயிலாடு துறைகடம்பந் துறையா வடு துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.
சொற்பிரிப்பு
கயிலாய மலைஎடுத்தான் கரங்க ளோடு சிரங்கள்உரம் நெரியக்கால் விரலால் செற்றோன்பயில்வுஆய பராய்த்துறைதென் பாலைத் துறை பண்டுஎழுவர் தவத்துறைவெண் துறைபைம் பொழில்குயில்ஆலந் துறைசோற்றுத் துறைபூந் துறை பெருந்துறையும் குரங்காடு துறையி னோடுமயிலாடு துறைகடம்பந் துறை ஆவடு துறைமற்றும் துறைஅனைத்தும் வணங்கு வோமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.