1
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும்முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங்கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங் கயிலாய நாதனையே காண லாமே.
சொற்பிரிப்பு
தில்லைச் சிற்றம்பலமும் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்கொல்லிக் குளிர்அறைப் பள்ளி கோவல்- வீரட்டம் கோகரணம் கோடி காவும்முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்கல்லில் - திகழ்சீர்ஆர் காளத் தி(ய்)யும் கயிலாய நாதனையே காணல் ஆமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.