திருமுறை 6 · 6.069 · 10

திருப்பள்ளியின்முக்கூடல்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பள்ளியின்முக்கூடல்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஆராத இன்னமுதை அம்மான் றன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத்தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானைநீரானைக் காற்றானைத் தீயா னானை நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்தபாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை; அயனொடுமால் அறியாத ஆதி யானைத்,தார்ஆரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச், சங்கரனைத், தன்ஒப்பார் இல்லா தானை,நீரானைக், காற்றானைத், தீஆ னானை, நீள்விசும்புஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்தபாரானைப், பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத் தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானைஅடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்படையானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
விடையானை, விண்ணவர்கள் எண்ணத் தானை, வேதியனை, வெண்திங்கள் சூடும் சென்னிச்சடையானைச், சாமம்போல் கண்டத் தானைத், தத்துவனைத், தன்ஒப்பார் இல்லா தானை,அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடுகணைகோத்து எய்தானை, அயில்கொள் சூலப்-படையானைப், பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப் புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னைவேதியனை வெண்காடு மேயான் றன்னை வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
பூதியனைப், பொன்வரையே போல்வான் தன்னைப், புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை,வேதியனை, வெண்காடு மேயான் தன்னை, வெள்ஏற்றின் மேலானை, விண்ணோர்க்கு எல்லாம்ஆதியனை, ஆதிரைநன் நாளான் தன்னை, அம்மானை மைம்மேவு கண்ணி யாள்ஓர்-பாதியனைப், பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் றன்னைவார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச் சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கேபார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
போர்த்தானை, ஆனையின்தோல்; புரங்கள் மூன்றும் பொடிஆக எய்தானைப்; புனிதன் தன்னை;வார்(த்)தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை; மறிகடலுள் நஞ்சுஉண்டு, வானோர் அச்சம்தீர்த்தானைத்; தென்திசைக்கே காமன் செல்லச், சிறிதுஅளவில் அவன்உடலம் பொடியா அங்கேபார்த்தானைப்; பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக் கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலேதடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
அடைந்தார்தம் பாவங்கள், அல்லல், நோய்கள், அருவினைகள், நல்குரவு, செல்லா வண்ணம்கடிந்தானைக், கார்முகில்போல் கண்டத் தானைக்; கடுஞ்சினத்தோன் தன்உடலை நேமி யாலேதடிந்தானைத்; தன்ஒப்பார் இல்லா தானைத், தத்துவனை; உத்தமனை; நினைவார் நெஞ்சில்படிந்தானைப்; பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங் கனலாடு திருமேனி கமலத் தோன்றன்சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத் திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய் மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
கரந்தானைச், செஞ்சடைமேல் கங்கை வெள்ளம்; கனல்ஆடு திருமேனி, கமலத் தோன்தன்சிரம்தாங்கு கையானைத்; தேவ தேவைத்; திகழ்ஒளியைத்; தன்அடியே சிந்தை செய்வார்வருந்தாமைக் காப்பானை; மண்ஆய், விண்ஆய், மறிகடல்ஆய், மால்விசும்புஆய், மற்றும் ஆகிப்,பரந்தானைப்; பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நதியாருஞ் சடையானை நல்லூ ரானை நள்ளாற்றின் மேயானை நல்லத் தானைமதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை மறைக்காடு மேயானை ஆக்கூ ரானைநிதியாளன் றோழனை நீடு ரானை நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
நதிஆரும் சடையானை, நல்லூ ரானை, நள்ளாற்றின் மேயானை, நல்லத் தானை,மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை, மறைக்காடு மேயானை, ஆக்கூ ரானை,நிதியாளன் தோழனை, நீடு ரானை, நெய்த்தானம் மேயானை, ஆரூர் என்னும்பதியானைப், பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நற்றவனை நான்மறைக ளாயி னானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந் திருவாரூர்த் திருமூலத் தான மேயகொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக் குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
நல்-தவனை; நால்மறைகள் ஆயி னானை; நல்லானை; நணுகாதார் புரங்கள் மூன்றும்செற்றவனைச்; செஞ்சடைமேல் - திங்கள் சூடும், திருஆரூர்த் திருமூலட் டானம் மேய,கொற்றவனைக்; கூர்அரவம் பூண்டான் தன்னைக்; குறைந்துஅடைந்து தன்திறமே கொண்டார்க்கு என்றும்பற்றவனைப்; பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஊனவனை உடலவனை உயிரா னானை உலகேழு மானானை உம்பர் கோவைவானவனை மதிசூடும் வளவி யானை மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்றகானவனைக் கயிலாய மலையு ளானைக் கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளேபானவனைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
ஊனவனை, உடலவனை, உயிர்ஆ னானை, உலகுஏழும் ஆனானை, உம்பர் கோவை,வானவனை, மதிசூடும் வளவி யானை, மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்றகானவனைக், கயிலாய மலைஉ ளானைக், கலந்துஉருகி நைவார்தம் நெஞ்சின் உள்ளேபானவனைப், பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையி னாலும்எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக் குரை கழலாற் கூற்றுவனை மாள வன்றுபடுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
சொற்பிரிப்பு
தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையி னாலும்எடுத்தானைத் தாள்விரலால் மாள ஊன்றி, எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்,கொடுத்தானைப், பேரோடும் கூர்வாள் தன்னைக்; குரைகழலால் கூற்றுவனை மாள, அன்று,படுத்தானைப்; பள்ளியின்முக் கூட லானைப்,- பயிலாதே பாழேநான் உழன்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.