1
கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்குருமணியைக் கோளரவ மாட்டு வானைக் கொல்வேங்கை யதளானைக்கோ வணவன் றன்னைஅருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்கதிருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
சொற்பிரிப்பு
கருமணியைக், கனகத்தின் குன்றுஒப் பானைக், கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னைக்,குருமணியைக், கோள்அரவம் ஆட்டு வானைக், கொல்வேங்கை அதளானைக், கோவ ண(ன்)னை,அருமணியை, அடைந்தவர்கட்கு அமுதுஒப் பானை, ஆன்அஞ்சும் ஆடியை,நான் அபயம் புக்கதிருமணியைத், திருமுதுகுன்று உடையான் தன்னைத்,- தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.